60
யிருக்கும் நீங்களெல்லாம் கட்டுரைப் போட்டி முடிவை அறிந்துகொள்ள பேராவலோடு இருக்கிறீர்கள். இந்த ஆண்டுக் கட்டுரைப் போட்டியில் ஒரு புதுமையைக் காண்கிறேன்...”
ஆசிரியர் இவ்வாறு கூறத் தொடங்கிய போது கண்ணாயிரம் மிடுக்கோடு தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான். ஒரு விதப் பெருமிதப் பார்வை பார்த்தடி தன் நண்பன் தங்கதுரையைப் பார்த்துப் பேசினான்.
“டேய் தங்கதுரை! நல்லாக் காதைத் தீட்டிக் கொண்டு கேள்’டா, முதற்பரிசு யாருக்கு’ன்னு!!
ஆசிரியர் தொடர்ந்து பேசினார்.
“...போட்டிக்குக் கட்டுரை எழுதிய மாணவர்கள் எல்லோருமே நன்கு எழுத முயன்றிருக்கிறார்கள். சிலர் `அறிவுச் சுடர்' என்ற எனது புத்ககத்திலுள்ள உழைப்பே செல்வம்’ங்கிற கட்டுரையை வரிக்கு வரி விடாமல் காப்பியடித்து எழுதி இருக்கிறார்கள்...”
ஆசிரியர் பேசிய தோரணையைக் கேட்ட மணிக்கு வியர்த்தே விட்டது. அவன் மெதுவாகத் தங்கதுரையின் காதில் கிசுகிசுத்தான்.
“என்ன’டா தங்கதுரை! நம்மையெல்லாம் ‘காப்பிக் கலைஞர்கள்’னு பட்டங் கொடுத்து