பக்கம்:திருப்புமுனை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13

பள்ளி ஆண்டுவிழாவில் தன் சாயம் வெளுத்ததால் தகர்ந்து போனான் கண்ணாயிரம். ஆசிரியர்களும் தன் நண்பர்களும் தன்னை மிகக் கேவலமாகக் கருத நேர்ந்ததை எண்ணி எண்ணி குமைந்தான். யார் முகத்திலும் விழிக்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்திக் கண்ணிர் விட்டான்.

தன் வீட்டாருக்கு இந்த விஷயம் தெரிந்தால் தனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என எண்ணி மருகிக் கொண்டிருக்கும்போது இனியன் கண்ணாயிரத்தைத் தேடிக்கொண்டு அங்கே வந்தான். தான் கொஞ்சமும் எதிர்பாரா நிலையில் அங்கு வந்து சேர்ந்த இனியனைக் கண்டபோது கண்ணாயிரத்துக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே வெட்கப்பட்டான். எப்படியோ ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு இனியனிடம் மனம்விட்டுப் பேசினான்:

“இனியன்! உன் மீது நான் கொண்ட பொறாமைக்கும், உனக்குப் பரிசு கிடைக்கக் கூடாது, எனக்கே கிடைக்கணும்’கிற பேராசை யினாலே உன் கட்டுரையைத் திருடியதற்கும் சரியான தண்டனையும் அவமானமும் கிடைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/66&oldid=489818" இலிருந்து மீள்விக்கப்பட்டது