பக்கம்:திருப்புமுனை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66


சிருச்சு நீ என்னை மன்னிக்கணும். கொஞ்சமும் உழைக்காம பரிசுபெறப் பேராசைப்பட்ட எனக்கு இதுவும் வேணும்” இன்னமும் வேணும்.

கண்ணாயிரத்தின் வார்த்தைகள் இனிய னின் மனதைத் தொட்டன.

“வருந்தாதே கண்ணாயிரம். உன் விருப்பத்தை என்னிடம் சொல்லியிருந்தால் நானே உனக்கு நல்ல கட்டுரையா போட்டிக்கு எழுதிக் கொடுக்திருப்பேன்.”

இனியனின் பரந்த மனப்பான்மையும் உதவத் துடிக்கு உபகார உணர்வும் கண்ணாயிரத்தின் கண்களைக் குளமாக்கின. அவன் தழதழத்த குரலோடு பேசத் தொடங்கினான்.

“உன் உயர்ந்த குணத்தைச் சரியா புரிஞ்சுக்காம நான் பெரிய தவறு செஞ்சுட்டேன். இனி நான் குறுக்கு வழியிலே தவறான போக்குகளை கனவிலும் நினைக்க மாட்டேன். உன்னைப் போல் நானும் கடுமையாக உழைப்பேன். மனம் போன படி சிந்தனையைச் செலுத்தாம படிப்பிலேயே கவனத்தைச் செலுத்துவேன். உன்னைப் போல நிறைய அறிவு நூல்களைப் படிச்சு திறமையை வளர்த்துக் கொள்வேன். அதன் மூலம் அடுத்த ஆண்டுப் போட்டியிலே உன்னைப் போல் முதற்பரிசும் பாராட்டும் பெறுவேன். இது உறுதி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/68&oldid=489819" இலிருந்து மீள்விக்கப்பட்டது