உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்

கின்றன.! ...ம்.அவரைப் பற்றி மட்டும்தானா? ...ம். ..அமரரானவர்களைப் பற்றி யெல்லாம் இப்பொழுது பேச எனக்கு மனம் வரவில்லை.”

“உண்மைதான்!”

“இன்னொன்று. புதுமைப்பித்தன் பெயரால் அவருக்குப் பின் வந்துள்ள சில புத்தகங்கள், தொகுப்புகளினாலேகூட மேற்படி குற்றச் சாட்டுகள் பிறந்திருக்கவும் கூடும்! அவர் பேரை வைத்து அவலப் பிழைப்பு நடத்தும் திருக்கூட்டத்தின் தவறாகவும் இருக்கலாம். இப்படிக்கூட நான் ஐயப்படாமல் இல்லை!”

புதுமைப்பித்தன் ரசமட்டம் ஆன “திருவிளையாடல்” புராணமாக விரிந்தது.

திரையுலகின் மாரீசத்தனத்தைப் பற்றிய சூடான பேச்சும் இடம் பெற்றது. ‘முதல் காளாஞ்சி’ என்ற கதையைக் காப்பியடித்துத் திரையிடப்பட்ட ‘நாட்டுக்கொரு நல்லவன்’ குறித்த விஷயமும் அம்பலமானது.

உண்மையான இலக்கியப் பணி செய்த இலக்கியப் பெருவள்ளலைப் பற்றிய பேச்சில் உரையாடல் முற்றுப் பெற்றது.

விடை பெற்றுச் சென்றார்கள்.

‘சினிமாக்காரர்களைத்தான் ரசிகர்கள் பார்க்கத் துடியாய்த் துடிப்பது வழக்கம். ஆனால் என் போன்ற எழுத்தாளர்களைக்கூடப் பார்ப்பதற்குத் தவம் கிடக்கும் ஆட்கள் இருப்பதிலிருந்து, தமிழ் இலக்கியத்துக்குள்ள நன் மதிப்பு என்றுமே மாறாது; குறையாது என்பது புலனாகிறது.!’

வந்திருந்த கதைகளின் உறைகளைப் பிரித்தார்.