பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii


திரு க.வெள்ளை வாரணனார் சிறந்த தமிழ் நூல், சைவ நூல் பயிற்சியுடன், திருமுறைகளில் தனிப்பட்ட ஆராய்ச்சித் திறன் பெற்றவர் என்பதை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட இவரது ‘பன்னிரு திருமுறை ஆராய்ச்சி’ நூல்களால் பலரும் அறிவர். இது பற்றியே இவர் நமது ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களால் ‘திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர்’ என்னும் பட்டம் அளித்து ஆசீர்வதிக்கப்பெற்றார்.

உமாபதி சிவாசாரியார் தேவாரத் திருப்பதிகப் பாடல்கள் பலவற்றை அவர் செய்த திருவருட் பயனில் உள்ள அதிகார முறையில் வைத்து, ‘அருள்முறைத் திரட்டு’ எனத் திரட்டியது போலத் திருமந்திரப் பாடல்கள் பலவற்றை அப்பெயரால் திரட்டி இருத்தல், இவரது மரபு வழிப்படும் நிலையைத் தெரிவிக்கின்றது. கல்வி மட்டுமன்றிச் சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும், நற்பண்பும் உடைய இவர் திருமந்திரப்பாடல்கள் பலவற்றிற்குத் தேவாரம், திருக்குறள் முதலியவற்றிலிருந்து எடுத்த சிறந்த மேற்கோள்களுடன் விளக்கவுரை எழுதி, முதற்கண் திருமூலர் வரலாறு, திரு மந்திரநூல் அமைப்பு என்பவற்றையும் தந்திருத்தல் பலர்க்கும் பயன் தருவதாகும்.

சிதம்பரம் அன்பர்கள் பலர் திருமந்திரத்தினை முறையாக இத்திரட்டின் ஆசிரியரிடம் வகுப்புமுறை வாயிலாகக் கேட்டுப் பயன் பெற்றனர். செல்வம், அதிகாரம் முதலியவற்றால் உலகியலில் செல்வாக்குப் பெற்றவர்கள் ஓர் ஊர் அல்லது நகரத்தில் ஒருசிலரே இருப்பார்கள். அவர்கள் மேலும் மேலும் உலகியலில் ஈடுபடுவதே நாட்டில் பெரும்பான்மையாகக் காணப்படுவது. சிதம்பரம் திரு ஆர். கனகசபைப்பிள்ளை, அறப்பணிச்செல்வர் டாக்டர். திரு. கே. அரங்கசாமிப்பிள்ளை, திரு வாகீசம்பிள்ளை முதலிய செல்வாக்குடைய பெருமக்கள் பலர் மேற்குறித்த திருமந்திரத்தினை வகுப்பு