பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

97


55. ஆவையும் பாவையும் மற்றற வோரையும்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நகரமே. (243)

மன்னனாற் குறிக்கொண்டு காக்கப்பெறுவார் இன்னின்னார் என்கின்றது.

(இ-ள்) பசுவையும் பாவை போலும் பெண்டிரையும் அறவோராகிய அந்தணர்களையும் தேவர்கள் போற்றுந் திருவேடத்தினராகிய சிவஞானிகளையும் உலகில் வரும் இடர்நீக்கிக் காக்குங் கடமையுடையவன் மாநிலங் காவலனாகிய மன்னனேயாவன். அவன் அவர்களைக் காக்குங் கடமையினைச் செய்யாதொழிவானாயின் அவன் மறுமையில் மீளா நரகத்தில் வீழ்ந்து வருந்தும் பெருந் துன்பத்தையடைவான் எ-று.

ஆ-பசு. பாவை-பாவை போல்வராகிய மகளிர். அறவோர்-அந்தணர்; துறவிகள். தேவர்கள் போற்றும் திருவேடத்தார் என்றது சிவஞானியராகிய அடியார்களை. நேயமலிந்தவராகிய அன்னோர் திருவேடத்தை அரன் எனவே கொண்டு தொழுதல் வேண்டும் என்பார் ‘தேவர்கள் போற்றுந் திருவேடத்தார்’ என்றார். காவலன்-நாட்டின் ஐவகை யச்சங்களைப் போக்கிக் காக்கும் கடமையினையுடைய வேந்தன். சாதுவாகிய பசுவும் பசுப்போன்று தம்மைப் பாதுகாக்கும் வன்மை பெறாத பாவையரும் அந்தணரும் அடியார்களும் உலகிற் கொடியோரால் வரும் துன்பங்களை எதிர்த்துத் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் உடல் வலிமையற்றோராதலின் அவர்களைக் காத்தல் அரசன் கடமையாம் என்பதும், அரசனது காவலின்றி அன்னோர் தமது கடமையை நிறைவேற்றுதல் இயலாதென்பதும் ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும்