பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

99


( இ-ள்) எவ்வுயிர்க்கும் தந்தையாகிய சிவன், தான் அவரவர் பக்குவ நிலேக்கேற்ப அருளிச் செய்த அறிவு நூல்களின் நெறிகளிலே தாம் தாம் மேற்கொண்டுள்ள சமய ஒழுக்கத்திற்குத்தக நிலைபெற்றெழுகாத மக்களே இனிமேல் வரும் பிறவியிலே எத்தகைய கடுந் தண்டங் களேயும் செய்து ஒறுத்தருளுவன் . இப்பிறவியிலேயே அவர்களே உடலுடன் வைத்து ஒறுத்துத் திருத்துவது அத்தகைய இறைமைத் தன்மையுடைய அரசனது கடமையாகும். எ-று

அத்தன் சிவன், சொன்ன ஆகம நூல்நெறி தத்தம்

சமயத் தகுதி நில்லாதாரை அம்மையில் எத்தண்டமும் செயும்; இம்மைக்கே மெய்த்தண்டம் செய்வது அவ்வேந் தன் கடன் என இயையும். அத்தன்-அப்பன். உலகாயத முதற்கொண்டு எல்லாச் சமய நெறிகளும் உயிர்களது அறிவின் தரத்துக் கேற்பச் சிவபெருமானல் ஏணிப்படி நெறியாக அருளிச் செய்யப் பெற்றனவே என்பார் ‘அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி என்ருர் .

நெறிகளுள் என ஏழாம் வேற்றுமையுருபு விரித்துரைக்க .

ஆகமம் எனினும் நூல் எனினும் ஒரு பொருள். எத் தண்டமும்-மென்மையும் வன்மையுமாகிய எவ்வகைத் தண்டங்களேயும். சிவன் அம்மையில் செய்யும்; இம் மைக்கே தண்டஞ் செய்வது அவ்வேந்தன் கடன் என்க. அம்மை-வரும் பிறப்பு. இம்மை-இப்பிறப்பு. மெய்த்தண் டம்-உடலுடன் வைத்து ஒறுத்தல். அவ்வேந்தன்-இறை வன் செய்யும் முறைமையாகிய அத்தன்மையையுடைய அரசன்.

'அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி.