பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருமந்திரம்

வானச் சிறப்பு

57. அமுதுாறு மாமழை நீரதேைல

அமுதுாறும் பன்மரம் பார்மிசைத் தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறுங் காஞ்சிரை யாங்கது. வாமே. (248)

மழைநீரா லுளதாம் பயன் கூறுகின்றது.

(இ-ள்) அமிழ்தின் தன்மை சுரக்கும் மழையின் நீரினல் (உயிர்கட்கு) இனிமை சுரக்கும் தன்மையவாய பலவகை மரங்கள் நிலமிசைத் தோன்றி வளர்வன. இனிமை சுரக்கும் கமுகு தென்னே கரும்புகளுடன் வாழை முதலியன அமிழ்தனேய நற்பயன்களைச் சுரப்பன. (இயல் பாகவே கசப்புடைய) எட்டியுங்கூட (மழையின் வளத் தால்) அவ்வமுதின் நீர்மையைப் பெற்றுச் சிறப்பதாகும்.

மழை இடையருது நிற்ப உலகம் நிலைபெற்று வருத லால் அம்மழைதான் உலகவுயிர்கட்கு இறவாமையைத் தரும் அமுதம் என்றுணரும் பான்மையையுடையது என்பார்,

'வானின் றுலகம் வழங்கி வருதலாற்

ருணமிழ்தம் என்றுணரற் பாற்று?

என்ருர் திருவள்ளுவர். அமுதமுண்டார் சாவாது நிலை பெறுதலின் ஓரறிவுயிர் முதல் எல்லாவுயிர்களையும் உலகில் உடம்புடன் நிலைபெறச் செய்யும் மழை நீரை 'அமுதுாறு மாமழைநீர் என்ருர் திருமூலதேவர்.

ஊறு கமுகு தெங்கு கரும்பொடு வாழை அமுதுாறும் எனவும் காஞ்சிரை(யும்) ஆங்கதுவாம் எனவும் இயைத் துரைக்க, காஞ்சிரை அமுதுாறுதலாவது நீர்வளத்தால் தன் கசப்புத்தன்மை குறைதல். தவநிலைக்குரிய மூலிகை