பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

109


'மகிழ்திட மடநெஞ்சே மானுடரில் நீயும்

திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே

யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட

பேரன்பே யின்னும் பெருக்கு?

என வரும் காரைக்கால் அம்மையார் அருளிச் செயலும்

அழலார் வண்ணத் தம்மானே அன்பிலணேத்து வைத் தேனே என வரும் அப்பர் அநுபவ மொழியும் இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கனவாகும். அன்பு என்பது சிவத்துவ விளக்கமே என்பதும் அவ்விளக்கத்தை முழுதும் பெற்றேர் சிவத்தோடு பிரிவின்றியுடனும் வீடுபேற்றினேப் பெற்றவ ராவர் என்பதும் உணர்த்து வார், 'அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே? என்ருர், தெளிவுபற்றி அமர்ந்திருந்தார் என இறந்த காலத்தாற் கூறினர். அறிதல் என்றது அழுந்தியறிதலாகிய அனுபவத்தினே.

முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை யெடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல்கூர வள்ளலார் மலையை நோக்கி

என்பு நெக்குருகியுள்ளத் தெழுபெரு வேட்கையோடும்:

‘நானனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏறத்தாமும்

பேணுதத்துவங்க ளென்னும் பெருகு சோபானம் ஏறி ஆணையாஞ் சிவத்தைச்சார அனையவர்போல ஐயர்:

பொங்கிய ஒளியினரீழல் பொருவிலன் புருவமாளுர் . 2

'பிறதுறை வேட்கை நீங்கி அன்புகொண்டுப்பச். ہوچ

செல்லும் அவச்?