பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x



உறுப்பினராகவும் அமர்ந்து பொதுநலப்பணிகள் பலபுரிந்தவரும் தமிழ்நாடு மாநிலக்கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்து தமிழகத்திற்கு நற்பணிகள் புரிந்துவருபவரும் கல்வி வளர்ச்சியிலும் தமிழ் வளர்ச்சியிலும் பேரார்வமுடையராய் நுண்ணிய நூல்களைக் கற்று மகிழ்தலையே தமது பொழுது போக்காகக் கொண்டவரும் ஆகிய திருவாளர் பிள்ளையவர்கள் தில்லைத் தமிழ் மன்றம் என்ற மன்றத்தினை உருவாக்கி அம்மன்றத்தின் சார்பில் திருமந்திர வகுப்பு நிகழ்தற்குரிய வாய்ப்பினைச் செய்துதவினார்கள். விரோதிகிருது ஆண்டு தை 23-ஆம் நாள் நிகழ்ந்த சிவகாமியம்மை திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளில் தில்லைத் தமிழ் மன்றத்தின் சார்பில் சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள தருமையாதீனத் திருமடத்தில் திருமந்திர வகுப்பு தொடங்கப்பெற்றது. ஒராண்டு முழுவதும் நிகழ்ந்த வகுப்புக்களில் திருமந்திரம் முழுவதிலுமிருந்து இருநூற்று நாற்பது திருப்பாடல்கள் உரை கூறப்பெற்றன. வகுப்பில் பாடஞ் சொல்லப்பெற்ற திருமந்திரப் பாடல்களின் உரையினைத் தொகுத்து நூலாக வெளியிடுவது பயனுடையதாகும் எனப் பலரும் விரும்பினார்கள். அதன் பயனாகத் திருமந்திர அருள் முறைத் திரட்டு என்னும் இந்நூல் தில்லைத் தமிழ்மன்றத்தின் வெளியீடாக வெளிவருகின்றது.

தில்லைப் பெருங்கோயிலின் திருப்பணிகளை இனிது நிறைவேற்றிக் குடமுழுக்கு விழாவை மிகச் சிறப்பாக நிகழ்த்தியும் பெரியபுராணம் அரங்கேறிய ஆயிரக்கால் மண்டபத்தைப் பெரும்பொருட்செலவிற் பழுதுபார்த்தும் தெய்வநெறித் தொண்டாற்றித் தில்லையம்பலவரது எடுத்த பொற்பாதத்தின் கீழ் என்றுமிருக்கும் பெருவாழ்வு பெற்றவர் ஆடூர் பெருநிலக்கிழார் M. இரத்தினசபாபதி பிள்ளையவர்கள் என்பதனைத் தமிழகத்திலுள்ள சைவ மெய்யன்பர்கள் அனைவரும் நன்குணர்வார்கள். தருமபூஷணம் பிள்ளையவர்