பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு Í Í 3

மாயெங்கும் பரந்ததோர் படரொளிப் பரப்பே. ...... யாருற வெனக்கிங் காரயலுள்ளார் ஆனந்தமாக்குமென் சோதி: என வரும் திருவாசகம் இங்கு நினைத்தற்குரியதாகும். கோரநெறி - ஆறலேப்பார் வாழும் அஞ்சத் தக்க நெறி. கொங்கு புக் கார் கூறை கோட்படுவர் ஏமரார் கொங் கேறினர் என்னும் பழமொழி இத்திருமந்திர அடியை அடியொற்றியதாகும்.

கல்வி

இறைவனைப் பற்றிய அறிவுநூல்களைக் கற்றல்.

65. நிற்கின்றபோதே நிலையுடையான்கழல்

கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற் குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றென் றிலா த கனிவிளக்காமே, (292 வாழ்நாள் உள்ள போதே மெய்ந்நூற் கல்வியைக் கற்று அதற்குத் தக ஒழுகுக என்று கூறுகின்றது.

(இ - ள்) நிலேயாத உடம்பில் உயிர் நிற்கின்ற காலத்திலேயே கேடிலியாய் என்றும் நிலே பெற்றுள்ள இறைவன் திருவடிகளேப் போற்றும் மெய்ந்நூல்களே இடை விடாது கற்றலேச் செய்வீராக. அங்ங்னம் கற்பீராயின் முன்னேப் பாவங்கள் தும்மைவிட்டுக் கழிந்து தொலேயும். அந் நூல்களிற் சொல்லிய வண்ணம் சொற் சோர்வுபடா மல் இறைவனே ப் போற்றி வணங்குவீராக. அவ்வாறு வணங்கினுல் ம ற் .ெ ரு ன் றி ன ல் அடரப்படாத தூய மாணிக்க மணி விளக்காக இறைவன் நும்முள்ளத்துள்ளே விளங்கித் தோன்றுவன் எ - று.

நிற்கின்றபோதே - நிலேயாத யாக்கை நிலே பெற்றுள்ள பொழுதே. ஒருபொழுதும் நிலேயுடையதன்று என்பார் நிற்கின்றபோதே என்ருர் . நிலையுடையான் - என்றும்