பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 1 15

களே இடமாகக் கொண்டவன். ஐம்பூதங்களேயும் தனக் குரிய உடம்பாகவுடையவன். உலகமெலாம் ஒடுங்கும் பலவூழிகள் தோறும் தனக்கழிவின்றி வெற்றிமிக்கு விளங் கும் அறவுருவாகிய விடையினே ஊர்தியாகக் கொண்ட மகாதேவன். இடைவிடாது தன்னைத் தியானித்தலால் விரிந்து பரந்த இடமுடைய மெய்யுணர்வுடையார் நெஞ் சத்தினையே தனக்குரிய கோயிலாகக் கொண்டு எழுந்த ருளியிருக்கின்ருன் எ-று.

கடலும் மலேயுமாக இறைவன் கலந்து விளங்குந் திறத்தினே, கனே கடலேக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானே? எனவும் ஐம்பூதங்களேயும் பிறவற்றையும் உடம்பாகக்கொண்டு விளங்குந் திறத்தினை நீலநீர் நெருப் புயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன், புலனயமைந்தனே டெண் வகையாய்ப் புணர்ந்து நின்ரு ன் எனவும் வரும் திருமுறைத் தொடர்களாலுணரலாம். ஊழிக் காலத்தும் உலேயாத பெருவலியுடைய அறவுருவாகிய ஆனேறுார் வோன் என்பார் பலவூழிதோறுTழி அடல் விடை யேறும் அமரர்கள் நாதன் என் ருர் . அடலானே றுணரும் அடிகள் ? என்பது ஆளுடைய பிள்ளேயார் அருள்மொழி. வேண்டு தல் வேண்டாமையினுற் சுருங்காது மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒப்ப மதித்துப் பரந் திடங் கொடுக்கும் விசும்புதோயுள்ள முடையார் என்பார் இடமுடையார் நெஞ்சத்து என்ருர். குறுமனம் முன்கலவாத் தமிழா கரன் என்பதும் அது. நெஞ்சத்து இல் - நெஞ்சமாகிய கோயில், நினைப்பவர் மனங் கோயிலாகக் கொண்டவன்? என்பதாம் ,

கேள்வி கேட்டமைதல்

கேட்கப்படும் நூற்பொருளேக் கற்றறிந்தார் கூறக் கேட்டு ஆசான் கூறிய நெறியில் அமைந்தொழுகுதல்.