பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 | 8 திருமந்திரம்

வரும் அருளிச் செயல்கள் இங்கு நினைக்கத் தக்கன. எங்கள் ஆதிப்பிரான் வருமாதவர்க்கு அருமாதவத்து மகிழ்ந்தருள் செய்யும் என இயையும். அருந்தவத்தின் பெருவலியால் அறிவதன்றி. என்பது அப்பர் தேவாரம் .

கல்லாமை

இறைவன் புகழ்த்திறங்களைக் கற்றலேச் செய்யா மை; என்றது அதனியை இழிபினே, விதி முகத்தாற் கூறிய அளவில் முற்றுப்பெருமை நோக்கி எதிர்மறை முகத் தானும் கூறுகின்ருர்,

69. ஆதிப்பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்

சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் ஒதிஉணர வல்லோமென்பர் உண்ணின்ற சோதி நடத்துந் தொடர் வறியாரே. (319)

இறைவனுரல்களேக் கல்லா மையால் வரும் இழிவு கூறு கின்றது.

(இ ள்) உலகத் தோற்றத்திற் கெல்லாம் நிமித்த காரணமாகிய முதல்வன். தேவர்களாலும் அறிதற்கரிய மேலாகிய சுடர்ப்பொருள், உயிர்களின் உள்ளத்தே நுண் னிய சோதியாகத் திகழ்வோன். அடியார்கள் அன்பினால் தொடர்ந்து போற்றும் பெருமைவாய்ந்த தெய்வம். எல்லா நூல்களையுங் கற்றுணர்ந்தோம் எனத் தம்மை வியந்துரைக் கும் உலகத்தாரிற் பலர் உயிர்க்குயிராய் உள் நின்ற சோதிப் பொருளாகிய இ ைற வ ன் உலகினேயும் உயிர்களேயுங் கலந்து நின்று இயக்கும் அந்துவித சம்பந்தமாகிய தொடர்பினை ஒருசிறிதும் அறியாதாராயினர் எ - று.