பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு f 19

பரஞ்சுடர் என்றது, அண்டவொளியும் அகண்டவொளி யும் ஆக விளங்கும் நிலேயின. சோதி என்றது உயிர்க் குயிராய் நின்று அறியாமையிருளே நீக்கி அறிவிக்கும் நிலை யினே. உண்ணின்ற சோதி எனப் பின்விளக்குதல் காண்க. தொடர்தல் அன்பினால் போற்றுதல். நடந்துந் தொடர் பாவது அவையே தானேயாய் இருவினையிற் போக்குவரவு புரிய ஆணேயின் நீக்கமின்றி நிற்றல். மெய்ப்பொருளேக் கல்லாதார் எத்துணை உலக நூல்களைக் கற்றுணர்ந்தாரா யினும் உண்மை யறிவு பெருர் என்பதாம்.

நடுவு நிலை

எல்லாப் பொருட்கும் நடுவாய், வேண்டுதல் வேண் டாமையின்றி நிற்கும் சிவபரம்பொருளின் அருள் வழி நிற்றல்.

70. நடுவுநின் ருர்க்கன்றி ஞானமும் இல்லே

நடுவுநின்ருர்க்கு நரகமும் இல்லே நடுவுநின்றர் நல்ல தேவரும் ஆவர் நடுவுநின்றர்வழி நானும் நின்றேனே, (320)

நடுவுநிலைமை இல்வழி யுளவாம் தீமையும் நடுவுநிற்பார்க் குள வாய நன்மையும் கூறுகின்றது.

(இ - ள்) நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியாக நடுநிற்கும் சிவனருள் வழி நின்றவர்க்கன்றி மெய்யுணர்வு தோன்றுதலில்லே, அங்ங்னம் அருள்வழி நிற்பார்க்குத் துன் பவுலக நுகர்ச்சியும் இல்லை. அருள் வழிநிற்கும் நடுநிலை யாளர் உலகிற்கு நலம் அளிக்கும் தேவரும் ஆவர். எனவே அங்ங்னம் நடு நிற்பார் வழியினே அடியேனும் பின்பற்றி ஒழுகுவேயிைனேன். எ-று.