பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

121


நடுவுநிற்றல் காத்தல் படைத்தல் ஆகிய பெருந் தொழில்கட்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் யாவராலும் விரும் பத்தகும் விழைவுக்கும் ஏதுவாம் என்பது கருத்து. நம்பன் -யாவராலும் விரும்பத்தக்க இறைவன் .

இரண்டாங் தந்திரம்

முதல் தந்திரத்திற் கூறப்பட்ட அறநெறி - ஒழுக்க நெறியில் நின்றவர்கள் அடையும் நலமும், நில்லாதவர் கள் அடையும் துன்பமும் இத்தன்மையன என்பதனைப் புராண வரலாறுகள் மூலமாக எடுத்துக்காட்டி விளக்கும் முறையில் அமைந்தது திருமந்திரத்தின் இரண்டாந் தந் திரமாகும். இஃது அ. க த் தி யம் என்பது முதல் பெரி யாரைத் துணைக் கே டல் ஈருக இருபத்தைந்து தலைப் புக்களையுடையதாகும். இதனைக் காமிகாகமத்தின் சார மென்பர்.

அகத்தியர் இறைவரது ஆணையால் உலகத்தைச் சம மாகச் செய்த வரலாற்தைக் குறிப்பிடுவது அகத்தியம் என்ற பகுதியாகும். இறைவன் நல்லோரைக் காத்தற் பொருட்டுத் தீயோரை ஒறுத்தடக்கிய வீரச் செயல்கள் எட்டினையும் விரித்துரைக்கும் பகுதி பதிவலியில் அட்ட வீரட்டம் என்பதாம். திருக்கோவலூரில் அந்தகாசுரனும். திருப்பறியலூரில் தக்கனும், திருக்கண்டியூரில் அயனும், திகுவிற்குடியிற் சலந்தராசுரனும், திருவதிகையில் திரி புரத்தவுணர்களும், திருவழுவூரில் கயமுகனும், திருக் கடவூரிற் காலனும், திருக்குறுக்கையிற் காமனும் சிவபெரு மானுல் வென்றடக்கப்பெற்ற வீரச்செயல்கள் இப்பகுதியிற் பேசப் பெறுகின்றன. இத்தலங்கள் எட்டும் இறைவ னுடைய வீரச்செயல்கள் வெளிப்பட்ட இடமாதலின் வீரஸ்தானம் - வீரட்டானம் ஆகி வீரட்டம் என வழங்கப் பெறுகின்றன.