பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருமந்திரம்

72. அப்பணி செஞ்சடை யாதி புராதனன்

முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறிவாரே. (343) இது முப்புரமழித்த புராண கதையின் உட் கருத்தினே உணர்த்துகின்றது.

(இ- ள்) கங்கை நீரையுள்ளடக்கிய சிவந்த சடை யினே யுடைய மிகப் பழையோனகிய சிவபெருமான் பொன் வெள்ளி இரும்பினலாகிய மூன்று அரண்களே அழித்தான் என வெளித்தோற்றமாய் நிகழ்ந்த செயலினே மட்டும் கூறுவர், அச்செயலின் உட்கருத்தினையுணராதார். இறைவல்ை அழிக்கப்பட்ட முப்புரம் என்றது, உயிரைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும் மலங்களின் காரியமாகிய செயலினே. இறைவன் அத் தகைய புரங்களே யழித்த நுட்பத்தை உள்ளவாறறிய வல்லார் யார்? (ஒருவருமிலர்) எ-று.

அப்பு - நீர்; கங்கை . ஆதிபுராதனன் - உலகுயிர்கட் கெல்லாம் முதல்வகிைய பழையோன் . அப்புரம் - மும் மல காரியமாகிய அப்புரங்கள் : இனி அப்புரம் என்ப தற்கு அம்முப்புரம் எனப் பொருள் கொண்டு அந்த முப் புரங்களே இறைவன் அழித்த செய்தியினே நேர் நின்றறிந் தவர் யாருள்ளார்கள், எனப்பொருள்கூறி அம்முதல்வன் இப்பொழுதும் முப்புரங்களே அழித்தருள்கின்ருன் என்பதே உண்மை எனத் தெளிவித்ததாகக் கொள்ளுதலும் உண்டு.

சிவபெருமான் உயிர்களுக்கு அருள்செய்தல் வேண்டி அருவுருவத் திருமேனியாகிய இலிங்கவடிவில் அமர்ந்து தேவர், அசுரர், மனிதர் முதலியோர்க்கு அருள்புரிந்த செய்திகளை விரித்துரைப்பது இலிங்கபுராணம்? என்ற பகுதியாகும்.