பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

123


73. திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானே

அரிய னென்றெண்ணி அயர்வுற வேண்டா புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன் பரிவொடு நின்று பரிசறிவானே. (348) அரியதில் அரிய இறைவன் வழிபடும் அன்பர்க்கு எளிவந் தருள்வன் என்கின்றது .

(இ - ள்) ஒரு நிலேயில் நில்லாது எங்கும் திரியும் இயல்பினவாகிய மும்மதில்களே அழித்த பெருமாளுகிய சிவனேக் காண்டற்கரியன் என்று கருதி அவனேயடைந்து அருள் பெறுமாறு எவ்வாறு எ ன் று மனந்தளர்தல் வேண்டா. எல்லாமுடையவனுகிய அவ்விறைவன் தன் பால் மெய்யன் புடைய அடியார்களுக்குப் பொய்த்து மறைவானல்லன்; அவர்பால் பேரிரக்கமுடையளுய் எதிர் நின்று அவர்தம் பரிசினை அறிந்து அருள்புரிவானவன்

6τ - έζι .

திரிதல் - ஒரு நிலேயில் நில்லாது பலவிடத்தும் செல்லு தல். காண்டற்கரிய கடவுளே நல்லோரைக் காத்தற் பொருட்டு மேருமலையை வில்லாகப் பிடித்து வெளிப்பட்டு நின்று கொடியோர் வாழும் முப்புரங்களே அழித்தான் என்பார், 'திரிகின்ற முப்புரஞ் செற்றபிரான் என்ருர், 'அரியன்’ என்றது, ஒன்றினுந் தோயாது எல்லாவற்றை யுங் கடந்து சிந்தனேக்கரியவனுய் விளங்கும் இறைவனது உண்மைநிலை யுணர்த்தியது. அரியானே? என்பது அப்பர் அருள்மொழி. புரிவு - விருப்பம்; மெய்யன் பு. பொய்யலன் - பொய்த்து ஒழுகுவானல்லன்; மெய்யாக வெளிப்பட்டருள்வான். பரிவு - அன்பின் பெருக்கமாகிய கருணை. பரிசு - தன்மை. அறிதல் - அறிந்து அருள் செய்தல். புரிவுடையாளர் என்றது, இறைவனேச் சிவ லிங்கத் திருமேனியில் வைத்து மெய்யன் பினல் வழிபாடு