பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருமந்திரம்

75. ஒருவனுமே உலகேழும் படைத்தான் ஒருவனுமே உலகேழும் அளித்தான் ஒருவனுமே உலகேழும் துடைத்தான் ஒருவனுமே உலகோ டுயிர்தானே. (404) படைத்தல் முதலிய எல்லாவற்றினையும் செய்தருளும் முதல்வன் ஒருவனே என்பதுணர்த்துகின்றது.

(இ - ள்) கடவுளாகிய ஒருவனே ஏழுலகங்களேயும் தோற்றுவித்தான்; அவ்வொருவனே ஏழுலங்களேயும் காத் தலைச் செய்தான். அவ்வொருவனே ஏழுலகங்களேயும் அழித்தலேச் செய்தான். அவ்வொருவனே உலகங்க ளோடும் உயிர்களோடும் பிரிவின்றி உடனுய்க் கலந்து மறைந்து அருள்புரிகிருன் எ - று,

உலகங்களைப் படைப்பவன் பிரமன் என்றும் காப்ப வன் திருமால் என்றும் அழிப்பவன் உருத்திரன் என்றும் இவ்வாறு ஒவ்வொரு தொழிலுக்கு ஒவ்வொருவராக வேறு பிரித்துரைப்பினும் இங்ங்ணம் வேறு வைத் துரைக்கப்படும் எல்லா மூர்த்திகட்கும் உயிர்க்குயிராய் நின்று இத்தொழில் களேப் புரிந்தருளும் முழுமுதற்கடவுள் ஒருவனே என ஐயமகற்றித் தெளிவித்தவாறு,

76. உள்ளத் தொருவனே யுள்ளுறு சோதியை உள்ளம்விட் டோரடி நீங்கா வொருவனே உள்ளமுந் தானும் உடனே யிருக்கினும் உள்ளம் அவனே யுருவறி யாதே. (431) இறைவன் செய்யும் மறைத் தற்ருெழிலே யுணர்த்துகின்றது. (இ - ள்) உயிருடன் கலந்து நிற்கும் தனிமுதல்வனும் உள்ளத்தினுள்ளே சோதியாய்த் திகழ்பவனும் நெஞ் சத்தை விட்டு ஒரடியளவுகூட நீங்காது உடன் இருப்பவ