பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு 1 27

னும் ஆகிய இலைவனை உயிரும் அவனும் ஒருங்கிருந் தாலும் உயிரானது அம்முதல்வனே உருவறியவொண்ணுத நிலையில் உள்ளது எ - று.

உயிர்க்குயிராய்க் கலந்துள்ளான் என்பார் உள்ளத்து ஒருவன் என்ருர், மனத்துள் மாயய்ை மாசறு சோதியாய் விளங்குகின்றன் என்பார் உள்ளுறு சோதி என்ருர், உயிர்களின் நெஞ்சத்தைவிட்டு அணுவளவும் கணநேர மும் பிரிவின்றி உள்ளான் என்பார் உள்ளம் விட்டு ஒரடி நீங்கா ஒருவன் என்ருர் . ஒரடி நீங்குதல் - ஓர் அடி பெயர்த்து வைத்தல்; விலகிச் செல்ல முயலுதல். அவ னுடைய திருவடி உயிர்களின் உள்ளத்தை விட்டு ஒரு சிறிதும் பெயர்வதில்லே என்பதாம். இமைப்பொழுதும் என்! நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க’ என்ருர் திருவாத வூரடிகளும் . உயிர்தன்ைேடு உடயிைருந்து காட்டியும் கண்டும் உதவும் பரம்பொருளே யறியாமைக்குக் காரணம் குடங்கையினேந்திய தீயின் சூட்டினே நிகழவொட்டாது தனக்கு மாருகிய மந்திரமுச்சரிக்குங்காறும் தடுத்து நிற்குங் குளிகைபோல, இறைவனேச் சிறப்பியல்பினுலுணரும் மெய் யுணர்வு தோன்றுங்காறும் அவனது பெருங்கருணே உயி ரிடத்துத் தே ன்ருதவாறு தடுத்து நிற்கும் உயிர்க்குற்ற மாகிய மல சத்தியின் வழிநின்று நடத்துவதாகிய இறை வனது சங்கற்பமே மறைப்பெனப்படும்.

விள்ளத்தா னென்றுமாட்டேன் விருப்பெனும்

வேட்கையாலே

வள்ளத்தேன் போலதுன்னை வாய்மடுத் தூண்டிடாமே உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் கள்ளத்தே நிற்றியம்மா எங்ங்னங் காணுமாறே: (4-76-7)

என வரும் திருநேரிசை இங்கு நினைக்கத்தகுவதாகும்.