பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 திருமந்திரம்

கர்ப்பக் கிரியை இறைவனது ஆற்றல் கருப்பையுள்ளும் நின்று ஒவ்

வோருயிரையும் பிறப்பித்துக் கருணைபுரிதலே விளக்குவது கர்ப்பக்கிரியை என்னும் அதிகாரமாகும்.

77. என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்

செம்பால் இறைச்சி திருந்த மனே செய்து இன்பால் உயிர்நிலை செயத இறை ஒங்கும் நண்பால் ஒருவனே நாடுகின் றேனே. (461)

மக்களது உடலின் அமைப்பினே விளக்குகின்றது .

(இ - ள்) என்பாகிய கழிகளால் கூரையினை நிரைத்து நரம்பாகிய கயிறுகளாற் பிணித்துச் செம்மைநிறக் குழம் புடன் கூடிய இறைச்சியாகிய மண்ணுற் சுவரெடுத்து இவ்வாறு திருத்தமுற மனே அமைத்து இன்ப உணர்வுடன் உயிர் நிலைபெறுதற்குரிய உடம்பினைப் படைத்துத் தந்தரு ளிய இறைவனது உயர்ந்த ஒட்டியுறவாந் தோழமை யில்ை ஒப்பற்ற முதல்வகிைய அவனே நாடி அடையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றேன் எ - று.

என்பு - எலும்பு, மிடைதல் - குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிச் சார்த்துதல். வரி - வரிகயிறு. செம்பால் - செந் நீர். இன்பால் - இன்ப உணர்வோடு. உயிர் நிலே - உயிர் நிற்றற்குரிய உடம்பு, ஒங்கும் - உயர்ந்த நன்பு - நண்பு; பெத்தத்தினும் முத்தியினும் ஒட்டியுறவாம் அத்துவித நிலை.

என் பிளு ற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்

திது நம்மில்லம் புன் புலால் நாறு தோல்போர்த்துப் பொல்லாமையால்

முகடுகொண்டு முன் பெலாம் ஒன்பதுவாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே

அன்பளு ரூர் தொழுதுய்யலாம் மையல்கொண்டஞ்சல்

நெஞ்சே (8-79-8)