பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருமந்திரம்

திலம் - எள். நின்மூடர் - அறமும் ஞானமுமில்லாத இழிந்தோர். பலம் - இம்மையின்பம். அறுதல் - கெட் டொழிதல். பரபோகம் - வீட்டின்பம். குன்றுதல் - தேய்ந்

தொழிதல்.

79. ஆவன ஆவ அழிவ அழிவன

போவன போவ புகுவ புகுவன காவலன் பேர் நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளை யோனே. (504) தானம் ஏற்றற்குரிய பாத்திரமாகிய சிவஞானியின் இயல்பு கூறுகின்றது.

(இ- ள்) நம் வினேப்பயணுகிய ஊழ்முறையால் நம் பால் ஆதற்குரியன உண்டாவன; அழிதற்குரியன அழி வெய்துவன. நம்மைவிட்டு நீங்குதற்குரியன நீங்குவன; நம்மை நாடிவருதற்குரியன வருவன. எவ்வுயிர்களேயும் ஒப்பக் காத்தருளும் நந்தியென்னும் பெயருடைய இறை வன் காட்டியருளியவற்றை (விருப்பு வெறுப்பின்றியேற்று) நுகர்பவன் எவனே அவனே ஏவியவற்றைச் செய்யும் இயல்பில்ை இறைவனுக்குரிய இளங்கிளே (தோழன்) எனப்படும் உறவினனுவன் எ - று.

ஆதல்-தோற்றம். அழிதல் - இறப்பு. ஆவாரை யாரே யழிப்பார் அதுவன்றிச் சாவாரையாரே தவிர்ப்பவர்? என்பது ஒளவையார் வ. ய்மொழி. போவன-நம் நுகர்ச்சிக் குரியனவாய் நம்முடைமையாயிருந்து நமக்குப் பயன்படா தொழிவன. புகுவ - இதுவரை நம்பால் இல்லாதிருந்து நமது நுகர்ச்சிக்குரியனவாய் நம்மையடையும் நுகர் பொருள்கள். 'பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம: என் ருர் திருவள்ளுவர். காவ லன் - எல்லாவுயிர்களையும் தாய்போற் காக்கும் அருளாள