பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

133


கில்லேயே என்பர் அப்பரடிகள் . உள்ளத்தினுள்ளே வாய்மை அருள் அன்பு தவம் செபம் முதலிய பல தீர்த் தங்கள் உள என்பதும் அவற்ருல் தாம் தூயராய் இறை வனத் திருமஞ்சனஞ் கெய்து வழிபடுபவர் மெய்யுணர் வினர் என்பதும்

சிந்தைவெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல்மாலை யடிச்சேர்த்தி எந்தைபெம்மான் என்னெம்மான் என்பார்பாவம் நாசமே? எனவரும் அப்பர் வாய்மொழியாற் புலம்ை. ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்பது திருவெம்பாவை.

கோடிதீர்த்தங் கலந்து குளித்தவை யாடினுலும் அரனுக் கன்பில்லையேல் ஓடுநீரினை ஒட்டைக் குடத்தட்டி மூடிவைத்திட்ட மூர்க்கனே டொக்குமே.

என்பது திருக்குறுந்தொகை .

திருக்கோயில்

82. ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான் திருக்கோயில் களானவை சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. (517) திருக்கோயிலில் வழிபாடு தவறில்ை வரும் ஏதம் கூறு கின்றது.

(இ - ள்) கூற்றுவனே உதைத்தடக்கிய இறைவன் எழுந்தருளிய திருக்கோயில்கள் யாவும் வேதாகமங்களிற் கூறப்பட்ட வழிபாட்டுமுறை தவறுபடுமாயின் நாட்டில் மழை யில்லாதொழிந்து பொறுத்தற்கரிய நோய் மிகுந்து நாட்டினைப் போற்றிக் காக்கும் அருமை வாய்ந்த மன் னர்களும் போர்வன்மையிற் குறைந்து சிதைவர் எ - று.