பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திருமந்திரம்

'மழையின்றி என்பதனுற் பசியும், நோய்மிக்கு என்பதன ற் பிணியும், போர் வலி குன்றுவர்? என்பதனுற் பகையும் உளவாதல் பெற்ரும், ஆற்றருநோய் - பொறுத்தற் கரிய நோய். அவனி - உலகம். போற்று அருமன்னர் - மலர் தலையுலகிற்கு உயிர் எனக் குடிமக்களாற் போற்றப்பெறும் அருங்குணங்கள் வாய்ந்த அரசர் , போர்வலிகுன்றுதல்நாடுகாக்கும் வன்மையிற் குன்றிப் பகைவருக்கு எளிய ராதல். திருக்கோயிலில் இருந்து தன்னே அன்பினுல் வழி பாடுசெய்வார்க்கு வரும் இடர்களைத் தீர்த்தருளும் பேராற்ற லுடையான் என்பதுணர்த்து வார் கூற்று ைதத்தான் ? என்ருர், சாற்றிய - வேதாகமங்களிற் கூறப்பட்ட. தப்பு தல் - முறையே நிகழாது தடைப்படுதல்.

‘உறுபசியும் ஓவாப் பிணியுஞ் செறுபகையுஞ்

சேராதியல்வது நாடு: (784)

என்ருர் திருவள்ளுவர். மழையின்மையால் விளேவின்மை யும் விளேவின்மையால் உறுபசியும் உண்டாதல் இயல்பு. ஒவாப்பிணி - நீங்காத நோய்; ஆற்றருநோய். செறு பகை - புறத்து நின்று வந்து அழிவு செய்யும் பகை. திருக்கோயில் வழிபாடு முறைப்படி நிகழாதொழியின் மேற்குறித்த தீமைகள் விளையும் என்பதாம்.

தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலே மாற்ற லரிது. (7) என்பதும் இங்கு நினைத்தற் குரியது.

83. முன்னவனர் கோயிற் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னரு நந்தி எடுத்துரைத்தானே. (518)

திருக்கோயிலிற் பூசை தடைப்படின் வரும் ஏதம் கூறு கின்றது.