பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

135


(இ-ஸ்) உலகமுதல்வகிைய இறைவனது திருக்கோயி லிற் பூசை தடைப்படுமானுல் நாடுகாக்கும் வேந்தர்க்குப் பலவகைத் தீங்குகள் உளவாம்; மழைவளங் குறையும். உலகிற் பிறர்பொருளேக் கன்னமிட்டுக் கள விடுந்தொழில் மிகுதிப்படும் என்று என்னுடைய குருவாகிய நந்தியெம் பெருமான் இன்றியமையாத அறிவுரையாக எடுத்துக் கூறினர் எ - று.

முன்ன வர்ை - முன்னேப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள். முளேத்தானே எல்லார்க்கும் முன்னே தோன்றி என்பர் நாவரசர். வாரி - மழைவளம். புய லென்னும் வாரி வளங் குன்றிக்கால் என்பது திருக்குறள் .

கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்

கோனிலை திரிந்திடின் மாரிவளங் குன்றும் என்ருர் மணிமேகலையாசிரியர். காசினியிற் கன்னங் களவு மிகுத்திடும் என்க. என் அரு நந்தி - எனது உயிர்க் குயிராம் அருமை வாய்ந்த குருமுதல்வர்.

84. பேர் கொண்ட பார்ப்பான் பிரான் றன்னே

அர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் போல்லா

வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே சீர்கொண்ட நந்தி தெரிந் துரைத்தானே.(519) திருக்கோயிலிற் பூசனை செய்தற்கு உரியரல்லாதார். இவர் என உணர்த்துகின்றது.

(இ - ள்) அந்தணர்க்குரிய ஒழுக்கமின்றிப் பிறப்பளவிற் பார்ப்பான் என்ற பெயரைக் கொண்டவன் திருக்கோயி லிற் பெருமானே அர்ச்சிக்கும் பணியை மேற்கொள்வா ஞயின் அந்நிலைமை போர்த்திறமையாற் பிறநாடுகளே