பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருமந்திரம்

வென்று கொண்ட பெருவேந்தர்க்குத் தீராத பிணியைத் தருவதாகும். அதனுேடன்றிப் பூமியின் கண்னேயுள்ள பல நாடுகளிற் பஞ்சமும் உண்டா கும் என்று ஞானச் சிறப்பினைக் கொண்ட எம் குருநாதனுகிய நந்தியெம்பெரு மான் உலகத்தார்க்கு ஆராய்ந்து எடுத்துக் கூறியருளின்ை எ - று.

பார்ப்பான் என்ற பெயர்க்குரிய மறையோதும் உணர் வும் ஒழுக்கமுமின்றிப் பிறப்பு ஒன்றே பற்றிப் பெயரளவிற் பார்ப்பான் எனப் பேசப்படுவோன் திருக்கோயிலில் இறை வனப் பூசனை செய்தற்குச் சிறிதும் தகுதியுடையவன் அல்லன் என்பதும், கோயிலிற் றகுதியில்லா தான் பூசனை செய்யின் தெய்வநம்பிக்கை குறைந்து ஆட்சித்தலைவ லுக்குத் தீராப் பிணியும் நாட்டிற் பெரும் பஞ்சமும் உண் டாம் என்பதும் இத்திருமந்திரத்தில்ை ஆசிரியர் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய அறிவுரையாகும்.

அதோமுகதரிசனம்

சிவபெருமானுக்கு நாற்றிசையினும் மேலும் ஆக அமைந்த திருமுகங்கள் ஐந்துடன் ஆருவது திருமுகமாக வெளிப்பட்ட கீழ்நோக்கிய திருமுகத்தினைத் தன்னுள் ளத்தே தியானித்துக் காண்டல் அதோமுகத் தரிசன மாகும். அதோமுகம் - கீழ்நோக்கியமுகம். இத்திருமுகம் அசுரரையழிக்க அறுமுகப்பெருமான் அவதரிக்கும் நிலே யில் வெளிப்பட்டதென்பது கந்தபுராணத்தால் அறியப் படும்.

85. எம்பெருமான் இறைவா முறையோ என்று

வம்பவிழ்வானேர் அசுரன் வலிசொல்ல அம்பளமேனி யறுமுகன்போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன்தானே. (520)