பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருமந்திரம்

மூன்ருங் தந்திரம்

இஃது அட்டாங்கயோகம் முதல் சந்திரயோகம் ஈருக இருபத்தொரு தலைப்புக்களையுடையது. இதன் கண் இய மம், நியமம், ஆதன ம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணே, தியானம், சமாதி என்னும் எண்வகை யோக உறுப்புக்களும், இவற்றை மேற்கொண்டொழுகுவோர் அடையும் பேறுகளும், அணிமா, லகிமா, மகிமா, பிராத்தி, கரிமா, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எண்வகைச் சித்திகளின் இயல்புகளும் பயன்களும், கலே நிலே காயசித்தி உபாயம் முதலியனவும் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இம் மூன்ரும் தந்திரத்தின் உள்ளுறையா வது சரீரசித்தி உபாயமாகும். உடம்பின்றி உயிர் தனி நின்று எத்தொழிலேயுஞ் செய்யமுடியாது. அறம் முதலிய உறுதிப்பொருள்களே உயிர்கள் பெறவேண்டுமானுல் அதற் குரிய முயற்சிகளே உடம்பொடுகூடிநின்றே செய்தல் வேண்டும். ஆகவே உயிர்க்கு ஞான சாதனமாகவுள்ள உடம்பினைப் பேணுதல் இன்றியமையாதது என்பதனைத் திருமூல நாயனர் இத் தந்திரந்தில் இனிது விளக்கியருள் கின் ருர்,

இயமம்

87. கொல்லான் பொய் கூருன் களவிலான்

என குணன நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையினின் ருனே. (554)

இயமம் என்னும் யோக உறுப்பினே மேற்கொண்டாரது இயல்பு உணர்த்துகின்றது.