பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருமந்திரம்

மறுபிறப்பும் இருவினைப் பயனும் அதனையறிந்து உண்பிக் கும் இறைவனும் உண்டென்னும் உறுதிப்பாடும், வறியார்க்கு ஈதலும், சிவனே நினேந்து மேற்கொள் ளும் விரதமும், முடிந்த முடிபாகிய மெய்ந்நூற் பொருளேக் கேட்டுணர்தலும், சிவ வேள்வியும், சிவ பூசனே யும், ஒளியுடைய பொருளேக் கூர்ந்துணரும் மெய்யுணர்வும் எனச் சொல்லப்பட்ட உயர்ச்சியுடைய இப்பத்துச் செயல் களையும் செய்வானுயின் அவ்வியல்புடையோன் நன்றே புரிதலாகிய நியமத்தில் நிற்போன் எனப்பெறுவன். எ-று.

'பெற்றதற் குவத்தல் பிழம்புநணி வெறுத்தல்

கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பயன் ஆசாற் களித்தலொடு பயனுடை மரபின் நியமம் ஐந்தே??

(சிலம்-ஊர்காண்.11) எனவரும் சிலப்பதிகார உரைமேற்கோள் நியமத்தின் இலக்கணத்தினே யுணர்த்துவதாகும். சந்தோடம்-மகிழ்ச்சி; பெற்றதற்கு உவத்தலாகிய மன நிறைவு; கிடைத்தது போதும் என்னும் நிறைவு. ஆத்திகம்-உலகத்தார் உண் டென்பதனை ஏற்றுக்கொள்ளும் உணர்வு. மகம்-வேள்வி. மதி-ஞானம். நிவம்-உயர்ச்சி.

ஆதனம்

89. பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி

சொத்திரம் வீரம் சுகாதனம் ஒரேழும் உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலவா சனமே. (563)

யோகத்திற்கு இன்றியமையாத இருக்கையாகிய ஆதனங் களின் வகையினை யுணர்த்துகின்றது.