பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

141


(இ~ள்) பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம் எனச் சொல்லப்பட்ட ஏழும் உத்தம ஆசனமாகும். இவற்றுடன் தொன்மையுடைய பிற ஆசனங்களேயும் கூட்டி யெண்ண எட்டு எனவும் பத்து எனவும் எட்டெட்டு (அறுபத்துநான்கு) எனவும் நூறு எனவும் பலவாகும். எ-று .

இவற்றுள், பத்திராசனம் என்பது, வலக்காலே இடது தொடையின் மேல்வைத்து இரண்டு முழந் தாள்களின் மேலும் இரண்டு கைகளையும் நீட்டி உடல் தளர்ச்சியின்றி நேரே நிமிர்ந்திருத்தல். கோமுகம்-கோமுகாசனம்; பசு வின் முகம் போன்ற இருக்கை; கணுக்கால்களே இடுப்புச் சந்திற் சேர்க்கும் ஆசனவகை என்பர். பங்கயம்-பதுமாச னம். வலது தொடையின் மேல் இடது பாதத்தையும் இடது தொடையின் மேல் வலது பாதத்தையும் உள்ளங் கால் மேல் நோக்கி விரிய இழுத்து வைத்து மலர்ந்த பாதங் களின் மேல் இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்ருக வைத்துக்கொண்டு நிமிர்ந்திருத்தல். கேசரி-சிங்காசனம். பாத நுனிகளைப் பூமியில் ஊன்றி முழங்கால்களில் இரு கைகளேயும் நீட்டி வாயைத் திறந்து கொண்டு கண்களே மூக்கு நுனியில் வைத்து நோக்கியிருத்தல். சொத்திரிசுவத்திகாசனம்; முழந்தாளுக்கும் தொடைக்கும் நடுவில் இரண்டு பாதங்களையும் வைத்து நிமிர்ந்து அமர்ந்திருத்தல், வீரம்-வீராசனம்; இடது தொடையில் வலது பாதத்தை யும் வலது தொடையில் இடது பாதத்தையும் வைத்து அமர்தல். சுகாசனம் என்பது, யோகி தனக்கு எப்படி யிருந்தால் சுகமுண்டாகின்றதோ அப்படி இருத்தல். இத் தகைய ஆசனத்தின் இயல்பினே விரித்துரைப்பது,

கநிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தலென் ருெத்த நான்கின் ஒல்கா நிலைமையோ டின்பம் பயக்கும் சமய முதலிய அந்தமில் சிறப்பின் ஆசன மாகும் (சிலப்-ஊர்காண்-11)

எனவரும் சிலப்பதிகார உரை மேற்கோளாகும்.