பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 திருமந்திரம்

பிராணுயாமம் - வளிகிலே

90. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்

உய்யக்கொண் டேறுங் குதிரைமற்

ருென்றுண்டு மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும்

கொடாதுபோய்ப்

பொய்யரைத் துள்ளி விழுத்திடுந்

தானே. (564)

மெய்ப்பொருளே நினேந்து பிராணயாமம் செய்வோர் தம் மனத்தை அடக்கவல்லவர் என்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) ஐந்துபேர்க்குத் தலைவனுகவுள்ளவன் அவ் ஆரில் வாழும் தலைவன். அவன் உய்திபெறும் நோக்குடன் ஏறிச் செலுத்தும் குதிரை ஒன்றுளது. அது மெய்ம்மை யாளர்க்கு வசப்பட்டு நிற்கும். பொய்ம்மையாளர்க்குக் கட்டுப்படாது துள்ளி யோடி அன்னேரைக் கீழே வீழ்த்தி விடும். எ-று.

இங்கு ஐவர்க்கு நாயகன் என்றது, ஐம்பொறிகட்குத் தலைமையாகிய மனத்தை. ஊர் என்றது பொறிகளுக்கும் மனத்திற்கும் இடமாகிய உடம்பின. உய்தல்-பிறவித் துன்பத்தினின்றும் விடுபடுதல். குதிரை என்றது பிராண கிைய வளியினே. மெய்யர்-என்றும் மாருத மெய்ப்பொரு ளாகிய பரம்பொருளைப் பற்றுக்கோடாக எண்ணி ஒழுகுப வர். பொய்யர்-நிலையில்லாத உலகப் பொருள்களே நிலை யென நம்பி வாழ்வோர். பற்றுக்கொடுத்தல்-அவர்கள் தன்னைப் பற்றும்படி தான் அவர் வசப்படுதல். துள்ளி விழுத்தல்-அவர் வழி நில்லாது துள்ளி யோடி அவர்களேத் தலைகீழாக விழும்படி செய்தல். உந்தியிலிருந்து எழும் இடகலே பிங்கலே என்னும் இருவகை நாடிகளின் வழி