பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

143


யாகச் செல்லும் காற்றினேப் புறத்தே செல்லாமல் தடுத்து அகத்தே சுழுமுனை நாடி வழியாகச் செல்லும்படி நிறுத்தும் பயிற்சியே பிராணுயாமம் எனப்படும். இதனே வளிநிலை யென வழங்குதல் தமிழ்மரபு. இதன் இ ய ல் பி னே விளக்குவது,

'உந்தியொடு புணர்ந்த இருவகை வளியும்

தந்தம் இயக்கந் தடுப்பது வளிநிலை?

என வரும் சிலப்பதிகாரவு ரைமேற்கோளாகும். இறைவன் அருள் வழி நின்று பிராணுயாமம் செய்வோர்க்கே மனம் ஒருவழிப்படும் என்பதனேப் பிறிது மொழிதல் எ ன் னு ம் அணியமைய இத் திருமந்திரம் விரித்துக் கூறுதல் உய்த் துணரத்தகுவதாகும்.

91. ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விர கறி வாரில்லே கூரிய நாதன் குருவின் அருள் பெற்ருல் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே. (565)

பிராணயாமப் பயிற்சியின் பயன் குருவின் அருள்வழியே பெறத்தக்கது என்கின்றது.

(இ - ள்) குதிரைச் சேவகன் நல்லவன். குதிரை களும் இரண்டுள்ளன. (அவனேக்கொண்டு அக் குதிரை களேத் தத்தம் புலங்களிற் செல்லுமாறு) செலுத்தி இழுத் துப்பிடிக்கும் உபாயம் அறிபவர்கள் இல்லே. மெய்யுணர்வு மிக்க ஞானத்தலேவனுகிய குருவின் திருவருளேப் பெற்ருல் சேர்த்துப் பிடிக்க (அக்கு திரைகள்) வசப்படும் எ - று.

ஆரியன் - குதிரைச் சேவன்; என்றது மனத்தின. குதிரை இரண்டாவன இடகலே, பிங்கலே என்னும் இரு நாடிகளில் செல்லும் வளிகள். வீசிப்பிடித்தல் - நெடுந் தூரம் செல்லுமாறு விட்டு இழுத்தல். விாகு- உபாயம்.