பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 திருமந்திரம்

கூரிய - மெய்யுணர்வு மிக்க. வாரிப்பிடித்தல் - (இடகலே , பிங்கல என்னும் இருவகை வளியையும்) சேர்த்துப் பிடித் தல். வசப்படுதல் - சுழுமுஇன வழிச்சென்று கும்பித்தல்.

92. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லே காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே. (571) பிராணுயாமஞ் செய்வோர் மரணமின்றி நெடுங்காலம் வாழ்வர் என்கின்றது.

(இ - ள்) வளியினை உள்ளே இழுத்தும் மெல்லென வெளியே விடுத்தும் இவ் (இடகலே , பிங்கலே) என்னும் இரண்டு காற்றினேயும் நிறைக்கும் கணக்கினே உள்ளவாறு அறிவாரில்லே. அங்ங்னம் காற்றினைக் கும்பகஞ் செய்யும் கூறுபாடாகிய அளவினே அறிந்து ஆள்பவர்க்குக் கூற்று வனேக் கடந்து நெடுங்காலம் நிலைபெறும் இலக்கு உள தாம் எ-று.

ஏற்றுதல் - மேல் ஏறும்படி காற்றினே உள்ளிழுத்தல், இறக்குதல் - கீழே இறங்குமாறு வெளி விடுதல். பூரித் தல் - நிறைத்தல். காற்றைப் பிடித்தல் - கும்பகஞ் செய் தல். கணக்கு - அளவு; கூறுபாடு. கூற்றை உதைத்த லாவது, உடம்பினின்றும் உயிரைப் பிரித்துக்கொண்டு செல்லும் கூற்றுவன் தன்கண் அணுகாதவாறு அவனது ஆற்றலைக் கடந்து வென்று சாவாது நெடுங்காலம் நிலே பெறுதல். குறி - இலக்கு இத்திருமந்திரம்,

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு 2 (269) என வரும் திருக்குறட்பொருளே விரித்து விளக்கும் முறை யில் அமைந்துள்ளமை காணலாம்.