பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருமந்திரம்

பிங்கலேயால் இரேசிப்பதும், பிங்கலேயாற் பூரித்துக் கும் பித்து இடகலையால் இரேசிப்பதும் பிராணயாம முறையாம் என்றவாறு ,

பிரத்தியாகாரம்

94. நாசிக் கதோ முகம் பன்னிரண்டங் குலம் நீசித்தம் வைத்து நினேயவும் வல்லேயேல் மாசித்தி மாயோகம் வந்து தலேப்பெய்யுந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லே

யாமே. (581)

மனத்தை ஐம்புலப் பொருள்களிற் புறத்தே போகாது அகத்தே திருப்புதலாகிய பிரத்தியாகாரத்தால் உண்டாகும் பயன் உணர்த்துகின்றது.

(இ - ள்) மூக்குக்குக் கீழே பன்னிரண்டங்குல எல்லேயி லுள்ள அநாகதத்தானத்திலே சாதகளுகிய நீ உள்ளத்தை ஒருமை நிலையில் வைத்துப் பரம்பொருளேத் தியானித்தலே யும் செய்ய வல்லாயாயின் பெருமை வாய்ந்த சித்தியும் பெருமை பொருந்திய (இராச) யோகமும் வந்து நின் இனப் பொருந்தும். உன்னுடைய உடம்புக்கு எக்காலத்தும் அழிவில்லே எ - று.

நாசி - மூக்கு. அதோமுகம் - கீழே. பன்னிரண்டகுல எல்லேயிலுள்ளது அநாகததானமாகும். இதயத்தானமா கிய இதுவே இறைவனை அகத்தே வைத்துப் பூசனை செய்தற்குரிய இடமாகும். பிரத்தியாகாரம் என்பது மனத்தினைப்புறத்தே செல்லாமல் அகமுகமாகத் திருப்பும் பயிற்சி. இது தொகைநிலையெனவும் பெயர்பெறும். இதன் இயல்பினை,