பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

147


பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமல் ஒருவழிப் படுப்பது தொகைநிலை யாமே?

என வரும் சிலப்பதிகார உரை மேற்கோளால் உணரலாம்.

தாரணை

95. கோன மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி

வீனத்தண் டுடே வெளியுறத்தா குேக்கிக் காணுக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வான வாடைக்கும் வழியது வாமே. (588)

தாரணையால் விளையும் பயன் உணர்த்துகின்றது.

(இ - ள்) புறத்தே புலங்களின் வழிப் படராமல் அக முகப்பட்டு நிற்கும் மனத்தினக் குறிக்கத்தக்க பொரு ளாகிய சிவத்தினிடத்தே (பிரமரந்திரமளவும்) கொண்டு செலுத்தி (அவ்வாறு சென்ற மனத்தின)க் கீழ்நோக்கிச் செல்லாதபடி (மந்திர முதலிய சாதனங்களாற்) பினித்து நடுநாடியின் உள்வழியாக (ஆறு ஆதாரங்களையும் கடந்து) மேலேப் பெருவெளியை அகமுகமாக நோக்கிய நிலையில் (புறத்தேயுள்ள கண்களும் செவிகளும்) காணுக்கண்களும் கேளாச் செவிகளும் எனக் கண்டோர் கருதும்படி (சோதிப் பொருளாகிய இறைவனே அகத்தே நோக்கி) இருக்கும் தாரணப் பயிற்சியுடையார்க்கு அப்பயிற்சி (வினைவயத் தால் உயிர்க்கு வரையறுத்துள்ள) வர்ழ்நாள் (வீணே கழி யாதபடி) அடைத்துக் காக்கும் உபாயமாம் எ - று.

தாரணை - தாங்கி நிற்றல்; இது பொறை எனவும் பெயர் பெறும். பொறை - பொறுத்தல்; மனமானது இறை வன் திருவருளேத் தன்கண் தாங்கி நிற்றல் மனத்தினை ஒருவழி நிறுப்பது பொறைநிலை’ எனவரும் சிலப்பதிகார உரைமேற்கோள் தாரணையின் இலக்கணத்தினேஉணர்த்