பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருமந்திரம்

துவதாகும். கோணுமனம் - உயிரின் நோக்கத்திற்கு மாறு படாது ஒத்துச்செல்லும்.மனம். குறிக்கொள்ளுதல்- குறிக்கத் தக்க இலக்காகிய சிவனிடத்திலே செலுத்துதல். கீழ்க்கட்டி - கீழே செல்லாதபடி பிணித்து நிறுத்தி, வீணுத்தண்டு - நடு நாடி. வெளி - பிரமரந்திரம். வாழ் நாள் - வாணுள் எனப் புணர்ந்தது. வாழ்நாள் வழி - உயிர் உடம்புடன் கூடி வாழும் நாள் கழிந்து செல்லும் வழி. அதனே அடைத் லாவது, அந்நாட்களைக் கழிய விடாது உயிர்நெடுங்காலம் உடம்புடன் கூடியிருக்கும்படி தடுத்து நிறுத்தும் உபாய மாகிய யோகப்பயிற்சி. இத்திருமந்திரம்,

'வீழ்நாள் படாமை நன்ருற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்: (33) எனவரும் திருக்குறளின் சொற்பொருள்களே அடியொற்றி யமைந்திருத்தல் அறியத்தகுவதாகும்.

தியானம்

96. எண்ணுயிரத் தாண்டு யோக மிருக்கினுங்

கண்ணு ரமுதனேக் கண்டறி வாரில்லே உண்ணுடி யுள்ள்ே யொளிபெற நோக்கிடிற் கண்ணுடி போலே கலந்திருந்தானே. (603)

தியானம் ஆமாறும் அதன் பயனும் உணர்த்துகின்றது .

(இ-ள்) எண்ணுயிரம் ஆண்டுகள் யோக நிலையில் (உள்ளத்தை ஒருமைப்படுத்தி) இருந்தாலும் (தியானிப் போர்) கண்களாற் பருகுதற்கினிய அமுதமாகக் காட்சி நல்கும் இறைவனேக் கண்ணுரக் கண்டறிவார் இல்லே . (அம்முதல்வனே அவனருளால்) தம் உள்ளத்துள்ளே நாடி அகத் தெழுஞ் சோதியின் ஒளிதோன்றுமாறு இருந்து நோக்கில்ை கண்ணுடியினுள்ளே வடிவந்தோன்றுமாறு