பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருமந்திரம்

97. மணிகடல் யானை வளர்குழல் மேக

மணி வண்டு தும்பி வளைபேரிகையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்க

வொண்ணுதே. (6.06) தியானத்தில் ஆழ்ந்திருப்போர்க்குத் தம்முள்ளே தோன் றும் பத்துவகை நுண்ணிய நாதங்களின் வழியாக இறை வ&னயடைந்து மகிழும் நிலை உண்டாகும் என்கின்ருர் .

(இ - ள்) மணி, கடல், யானை, இசை வளர்ச்சிக்கு இடஞகிய வேய்ங்குழல், மேகம், நீலமணி போலும் நிற முடைய வண்டு, (தேன் நுகரும்) தும்பி, வளே (சங்கு): பேரிகை, யாழ் என நுண்ணியவாய் மென்மையாகத் தோன்றுகின்ற இப் பத்துவகை ஒலிகளும் இறைவனேத் தாழ்ந்து போற்றும் தியானமுடையார்க்கு அன்றி ஏனை யோரால் செவிப்புலனுல் கண்டுணர்தல் இயலாது எ-று

மணி, கடல், முதலாக எ ண் ண ப் ப ட் ட பத்தும் அவற்ருல் எழும் ஓ ைச ைய க் குறித்து நிற்கின்றன. தணிந்து எழுநாதம் - தியானிப்போர் உள்ளத்துள்ளே இறைவனருளால் மென்மையாகத் தோன்றும் நுண்ணிய ஒலிகள் .

‘நன்மணிநாதம் முழங்கியென் உள்ளுறு நண்ணுவதாகாதே?

జ7@rఉఐpg: ஓசையில் இன்பம் மிகுத்திடுமாகாதே?

'சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பனவாகாதே? என மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசசத் தொடர்கள் அவர்தம் தியான அநுபவத்தின் மெய்ம்மை யினைப் புலப்படுத்துவனவாதல் அறிந்து போற்றத் தகுவ தாகும். இவ்வாறு இறைவன் திருவருளால் தம் அகத்தே