பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

151


தோன்றும் நுண்ணிய ஒலியின் வழியாக இறைவனேக் கண்டு தெரிசிப்பதாகிய தியான முறையினை அறிவுறுத்து

வது ,

'திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று

நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற

நேர்பட அங்கே நின் றுந்தீபற? (17)

எனவரும் திருவுந்தியாராகும். திருச்சிலம்பாகிய திரு வருளினுடைய ஓசையொலியாகிய பிரகாச ஒலிவழியே சென்று அவ் விடத்திலே செவ்வியதாக நின்று ஐந் தொழில் திருக்கூத்தியற்றும் இறைவனேக் கண்டு தெரி சிப்பாயாக என்பது இதன் பொருளாகும்.

சமாதி

98. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று

சிற்பனை யெல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகுந்தண் சமாதியே. (628) எண்வகை யோகவுறுப்புக்களுள் ஒன்ருகிய சமாதியின் இயல்பு உணர்த்துகின்றது.

(இ-ள்) பொருள்தோறும் உலகத்தார் கற்பித்து வழங்கு கின்ற கற்பனைகளே யொழிந்து மூலாக்கினிவழியே மேற் சென்று (உலகினைச் சிருட்டித்த) சிற்பனும் பேரொளி யாய்த் திகழும் அழகனும் ஆகிய இறைவனே த் தேடிப் புணர்ந்த சந்திரமண்டலத்தோடு பொருந்தித் தனக்கு மேலான பரம்பொருளே தான் ஆகும் நிலையில் தற்போத மிழந்து ஒன்றியுடனுகும் தகுதிவாய்ந்ததே உள்ளத்தைக் குளிர்விக்கும் தண்மையினதாகிய சமாதி எ-று.