பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$52 திருமந்திரம்

கற்பனே.உலகத்தார் பொருள் தோறும் புனேந்து வழங் கும் பெயர், வடிவு முதலிய வேற்றுமைகள். கனல்மூலாக்கினி, சிற்பன்-உலகினேப் படைத்த சிற்பி: என்ற து உலகியற்றியாளுகிய இறைவனே. புணர்மதி. மூலாக்கினி யின் வெம்மை சென்று சார்தற்கு இட கிைய சந்திர மண்டலம். தற்பரம்-தனக்குப்பரம் என்றது, ஆன்மா வாகிய தனக்கு மேலான பொருள் என்றவாறு. தண் மைகுளிர்ச்சி. சிராப்பள்ளிக் குன்றுடையானேக் கூற என் உள்ளம் குளிரும்மே? எனவும் உளங்குளிர் தமிழ் மாலே: எனவும் வரும் திருமுறைத் தொடர்கள், பிறவித் துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கு வது இறைவன் திருவருள் நினேவாகிய சிவ ஞானம் என்னும் மெய்ம்மையை வற்புறுத்துவனவாகும். சமாதி என்பது இயமம் முதலான எண்வகை யோக அங்கங் களி லும் பயிற்சி நிரம்பிய ஆன்மா தன்னை மறந்து சிவத்துடன் ஒன்றியுணரும் நிலை. ஞானத்தின் நுண்மை நிலையாகிய இதனே நொசிப்பு: என வழங்குதல் தமிழ் மரபு. நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை (தொல்உரியியல்-78) என்ருர் தொல்காப்பியனுர், நொசிப்பு எனப்படும் சமாதியின் இயல்பினே விளக்குவது,

ஆங்ங்னம் புணர்ந்த அம்முதற் பொருளொடு தான் பிற ளு காத் தகையது சமாதி:

(சிலப்-ஊர்காண்-11) எனவரும் சிலப்பதிகார உரை மேற்கோளாகும். கற்பனை யற்று' என்னும் இத்திருமந்திரச் சொற்பொருளமைப்பினே நினைவு கூரும் முறையில் அமைந்தது,

கற்பளை கடந்தசோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின்மேலாம் சிற்பர வியோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றிபோற்றி? என வரும் பெரியபுராணத் திருப்பாடலாகும்.