பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திருமந்திரம்

மகேசன், சதாசிவன் என்போராவர். மீதானம்-ஆரு தாரங் களுக்கும் மேலேயுள்ள இடம்; என்றது புருவ நடுவாகிய ஆஞ்ஞைத்தானத்திற்கு மே லா. க வு ள் ள பிரமரந்திர வெளியை மேதை என்பது ஞாளுக்கினியாகிய கலே-இது தீப்பிழம்பின் நிறமுடையது என்பர். ஈரெண் கலே பதினறு கலே நிலைகள். பிரமரந்திரத்துக்கு அப்பால் உள்ள பரை வெளியில் உள்ள பதினறு கலே நிலேகளாவன: 1. அகாரம், 2. உகாரம், 8. மகாரம், 4. விந்து, 5. அரைமதி, 6. நிரோதினி, 7. நாதம், 8. நாதாந்தம், 9. இடப் புறத்துச் சத்தி, 10. வியாபினி, 11. வியோமருபை, 12. அனந்தை; 13. அநாதை, 14. அநாசிருதை , 15. சமண, 18, உன்மனே . இவையாவும் பராசத்தியின் நிலேகள் எனவும் இவற்றுள் அகரம் முதல் நாதாந்தம் வரையுள்ள எட்டும் ஆதாரம் எனவும், சத்திமுதல் உன் மனே வரையுள்ள எட்டும் நிராதாரம் எனவும் கூறுவர். மனம் புறப் பொருள்களிற் செல்லாமல் உடம்பின் அகத்தே யுள்ள ஆறு ஆதாரங்களிலும் முறையே அவற்றிற்கு அதி தெய்வமாகிய மூர்த்தியைத் தியானித்த பயிற்சியாலே' நிராதாரமாகிய மனத்துளக்கமற்ற மேலிடத்திலே பரம் பொருளே வழிபட்டு மகிழுமாறுணர்த்தும் இத்திருமந்திரப் பொருளே,

  • வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்

வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே? ? & (6-12-1) எனத் திருநாவுக்கரசரும்.

'ஆதாரத் தாலே நிராதாரத்தே சென்று

மீதான த் தே.செல வுத்தீ பற விமலற் கிடம தென்றுந் தீபற?? (திருவுந்தியார்-8,

எனத் திருவியலூர் உய்யவந்த தேவநாயனரும் குறிப் பிட்டு விளக்கியுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.