பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

157


காயசித்தி உபாயம்

102. உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞான ஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்

தேனே. (724) உயிர் ஞானம் பெறுதற்கு வாயிலாயமைந்த உடம்பினேப் பேணுதலின் இன்றியமையாமையினைத் திருமூலர் தமது அநுபவத்தில் வைத்து இத்திருப்பாடலால் வற்புறுத்தி யருள்கின்ருர் .

(இ-ள்) (இறைவனருளால் உயிர்கள் பெற்ற) உடம்பு (நன்முறையிற் பேணப்படாது) சிதையுமானல் (அதன் கண் நிலேபெற்ற) உயிரும் பயன்பெருது தளர்ச்சியுறும். (அதுவுமன்றி) உறுதியாக மெய்ஞ்ஞானத்தையும் அது பெறமாட்டாது. (ஆகவே) உடம்பினே வளர்த்தற்குரிய (இயமம் முதலிய யோகவுறுப்புக்களாகிய) உபாயங்களே உணர்ந்து எனது உடம்பினே நன்முறையிற் பேணி வளர்த் தேன். அதனல் நிலேபெற்ற உயிர்க்குரிய ஞானத்தையும் வளர்த்தவனுயினேன். எ-று.

உயர்தினையாகிய மக்களே உடம்பும் உயிரும் எனப் பிரித்துப் பேசுமிடத்து அஃறிணைச் சொல்லால் வழங்குதல் முறையாயினும், அவற்ருேடு ஒன்றிச் செலுத்தும் தெய்வ ஆற்றலே நோக்கி உடம்பார், உயிரார் என உயர்திணேச் சொல்லாற் குறித்தார் திருமூலர். காலம் உலகம் உயிரே உடம்பே?’ (தொல்-சொல்-58) என்னும் சூத்திரத்தில் சொல்லப்பட்ட சொற்கள், உயர்திணைப் பொருள்களைக் குறித்தன வாயினும் சொல்வகையால் அஃறிணைச் சொற் களே எனவும் அவை உயர்திணைக்குரியவாக ஈறுதிரித்துச் சொல்லப்படின் உயர்திணைச் சொல் முடிவுபெறும் (தொல்