பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 திருமந்திரம்

சொல்-60) எனவும் ஆசிரியர் தொல்காப்பியர்ை கூறி யுள்ளமை இங்கு உணரத் தகுவதாகும். உயிருக்கு என்றும் அழிவில்லையாகவும் ஈண்டு எஉயிரார் அழிவர் என்றது, ஆன்மா தனக்குரிய பயனைப்பெருது இழத்தலேக் குறித்து நின்றது. உயிரை வளர்த்தலாவது ஆன்மாவை ஞானப் பெருக்க முடையதாக உயரச் செய்தல்.

105. உடம்பின முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக்குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண்

டானென் றுடம்பினே யானிருந் தோம்புகின்

றேனே. (725) மக்கள் உடம்பின் மாண்பினை விளக்கி உடலேம்பலின் இன்றியமையாமையினைத் தமது அநுபவத்தில் வைத்து அருளிச்செய்கின்ருர்.

(இ-ள்) உண்மை யுணராத முற் பருவத்தில் உடம் பினக் குற்றமுடையது என்று எண்ணி (அதனைப்பேனது இகழ்ந்திருந்தேன். (இறைவனருளால் சிவயோக நெறியில் ஒழுக நேர்ந்த பின்) எனது உடம்பினுள்ளே (எனது உயிரி னும்) மேலானதொரு பொருள் பொருந்தியிருத்தலேக் கண்டுணர்ந்தேன். எனது உடம்பினுள்ளே யாவர்க்கும் மேலோனகிய இறைவன் உடம்பைக் கோயிலாகக்கொண்டு எழுந்தருளியுள்ளான் என்னும் மெய்ம்மை யுணர்ந்து எனது உடம்பினை யான் (இயம முதலிய யோக சாதனங்களே மேற்கொண்டு பல்லாண்டுகள் யோக நிலையில்) இருந்து தளராது பேணிவருகின்றேன். எ-று.

  • இழுக்கு-குற்றம். உறுபொருள்-மேலான பொருள். உத்தமன்-யாவர்க்கும் உயர்ந்தோன். இருத்தல்-யோக சாதனங்களால் இவ்வுலகில் நெடுங்காலம் உடம்பொடு