பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

159


கூடியிருத்தல். ஒம்புதல்-பாதுகாத்தல். இத்திருமந்திரத்தை அடியொற்றி இதன் விளக்கமாக அமைந்தவை,

' உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக

மடம்படும் உணர்நெய் அட்டிஉயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தியால் எரிகொள இருந்துநோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே (4-75-4)

எனவும்,

‘ காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனை ஈசனுர்க்குப் போற்றவிக் காட்டிளுேமே” - (4-76-4) எனவும,

புன்புலால் யாக்கை புரை புரைகளிையப் பொன்னெடுங்

கோயிலாப்புகுந் தென் என்டெ லாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே?

(திருவாசகம்) எனவும்,

  • வினைபடும் உடல்நீ புகுந்து நின் றமையால்

விழுமிய விமானமாயினதே ? . (திருவிசைப்பா)

எனவும் வரும் திருமுறைப்பனுவல்களாகும்.

நாலாங் தந்திரம்

யோக உறுப்புக்களால் உடம்பை நன்கு பேணிச் சரியை கிரியை ஆகிய நெறிகளில் பழகிச் சிவ யோகத் தில் நிலைபெற்று நின்று சிவ ஞானமாகிய பயனைப் பெறு தற்கு நிறைமொழி மாந்தர் அருளிய மறை மொழிகளா கிய மந்திரங்களின் பயிற்சியும் அவற்றின் வலிமையும் பெறுதல் இன்றியமையாததாகும். ஆகவே திருவம்பலச் சக்கரம் முதலிய மந்திரச்சக்கரங்களின் உபாசன முறை