பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

165


ஆடும் படிகேள் நல் லம்பலத்தான் ஐயனே

தாடுந் திருவடியி லே நகரம் - கூடும்

மகரம் உதரம் வளர் தோன் சிகரம்

பகருமுகம் வா, முடி யப் பார் . (32)

ஓங்கார மேநற் றிருவாசி யுற்றதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம்

அற்ருர் அறிவர் அணி அம்பலத்தான் ஆடலிது பெற்ருர் பிறப்பற்ருர் பின் . {శి శ్రీ)

எனவரும் உண்மை விளக்கச் செய்யுட்கள் உணர்த்துவன.

ஒலிக்கின்ற உடுக்கை ஏந்திய கையிலே சிகரமும், வீசிய கையிலே வகரமும், அஞ்சலென்றமைத்த கையிலே யகரமும், தீயேந்திய கையிலே நகரமும், முயலகனை மிதித்து ன்றிய திருவடியிலே மகரமும் அமைய இறைவன் ஆடுந் திறத்தினே,

சேர்க்ருந் துடிசிகரம் சிக்கெனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்கு அங்கிநகரம் அடிக்கீழ் முயலகனர் தங்கும் மகரமது தான் . (33)

எனவரும் உண்மை விளக்கமும்,

உடுக்கையேந்திய கையினலே மாயையை நீக்குத லும்; தீயேந்திய கையினலே வினையைச் சுட்டெரித்தலும், ஊன்றிய திருவடியினலே மல்ம் சாய அமுக்குதலும், எடுத்த திருவடியினலே அருளே ததுவாக நிறுத்துதலும், அமைத்த கையினலே உயிர்களே ஆனந்த வெள்ளத்து அழுத்துதலும் இறைவனது திருக்கூத்து முறைமையாதலே,