பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருமந்திரம்

110. வாயு மனமுங் கடந்த மனேன்மணி

பேயுங் கணமும் பெரிதுடைப் பெண் பிள்ளே ஆயுங் அறிவுங் கடந்த அரனுக்குத் தாயும் மகளும் நற் ருரமும் ஆமே. (1178) இடமும் இடத்துள பொருளும் (ஆதாரமும் ஆதேயமும்) ஆகச் சிவமும் சத்தியும் விரிந்து விளங்குந் திறம் உணர்த்து கின்றது.

(இ-ள்) சொல்லையும் நினைப்பையுங் கடந்த மனேன் மனியாகிய அன்னேயும் அச்சம் விளக்கும் பேய்க் கூட்டத் தினையும் ஆக்கம் நல்கும் பூதகணங்களேயும் தனக்கு ஏவற் சுற்றமாக நிரம்பவுடைய கன்னியும் ஆகிய பராசத்தி நூலுணர்வையும் பசு போதத்தையுங் கடந்து அப்பா ற் பட்டுவிளங்கும் சிவபரம்பொருளுக்குத் தாயாகவும் மகளாக வும் நல்ல மனேவியாகவும் திகழ்கின்ருள் எ-று.

வாய், மனம் என்பன ஆகு பெயராய்ச் சொல்லேயும் நினைப்பையும் குறித்தன. வாயுமண்முங் கடத்தலாவது சிந்தனைக்குஞ் சொல்லுக்கும் எட்டாது அப்பாற்படுதல், மனுேன்மனி-பெண்பிள்ளை-கன்னி என்பன இறைவியைக் குறிக்கும். ஆய்தல் என்றது நூலுணர்வையும் அறிவு என் றது உயிரறிவினையும் குறித்தன. அரன் - உயிர்களின் பா சங்களே நீக்குபவன்.

இறைவனும் அவனின் வேறல்லாத திருவருளும் அருள் புரியுங் குறிப்புடன் சிவமும் சத்தியுமாகத் திகழ்தல் பற்றிச் சிவமும் சத்தியும் கணவனும் மனேவியும் ஆகவும், சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றுதல் பற்றி அவ்விரண்டும் முறையே தந்தை மகள் ஆகவும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றுதல் பற்றி அவ்விரண்டும் முறையே மகன் தாய் ஆகவும், சுத்த மாயையினின்றும் இறைவனது ஞானசத்தியின் தூண்டுத லால் சிவ தத்துவமும் கிரியா சத்தியின் தூண்டுதலால்