பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 திருமந்திரம்

பரம் பொருளாகிய இறைவன் புறப்பொருளே நோக் காது அறிவு மாத்திரையாய் நிற்கும் நிலேயிற் சிவன் எனவும் உயிர்களை நோக்கி நிற்கும் நிலையிற் சத்தி எனவும் அப்பனும் அம்மையுமாகக் கூறப்பெறுவன். இறைவனருள் ஞான சத்தியாய் மாயையில் தோய்ந்த பகுதி சிவ தத்து வம். கிரியா சத்தியாய்த் தோய்ந்த பகுதி சத்தி தத்து வம். ஞானமும் கிரியையும் ஒத்துத் தோய்ந்த பகுதி சதாசிவ தத்துவம். ஞானம் குறைந்து கிரியைமிக்குத் தோய்ந்த பகுதி ஈசுர தத்துவம். ஞானமிக்குக் கிரியை குறைந்து தோய்ந்த பகுதி சுத்தவித்தை இவை ஐந்தும் சுத்த தத்துவங்கள் என வழங்கப்பெறும். இவை பரம சிவனுக்குச் சுதந்திர வடிவங்கள்.

சிவம், சத்தி, நாதம், விந்து-அருவத்திருமேனி 4. சதாசிவன்-அருவுருவத் திருமேனி 1.

மகேசன், உருத்திரன், மால், அயன்-உருவத்

திருமேனி 4.

ஆக இறைவன் ஒன்பது வேதமாக நின்று உயிர்கட்கு அருள்புரிவன் என்பர்.

ஐந்தாங் தந்திரம்

சுத்த சைவம் முதல் உட்சமயம் முடிய இருபது பிரிவு களையுடையது. நால்வகைச் சைவம், சரியை கிரியை யோகம், ஞானம், சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாசமார்க்கம் ஆகிய நெறிகள், சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய பேறுகள், மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதர சத்தி நிபாதங்கள் கூறப் பட்டுள்ளன. புறச் சமயங்களின் ஒவ்வாத் தன்மைகளே எடுத்துரைப்பது புறச்சமய துTடணம் என்ற பகுதி.

பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களும் என்றும் உள்ளவை. பதி-இறைவன். இறைவன் ஒருவனே, பசுஉயிர். உயிர்கள் எண்ணில்லாதன . உயிர்கள் அநாதியே