பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திருமந்திரம்

புனுகு சேர்ந்த நடுதறி போன்று (அவர்கள் பால்) சிவ ஞானமாகிய நறுமணம் நிலைபெற்றுத் தோன்றும் எ-று.

கந்தம்-மணம். சீவன்-உயிர். பூவினுள்ளே நறுமணம் வெளிப்பட்டுத் தோன்றுமாறு போன்று உயிர்க்குள்ளே உயிர்க்குயிராகிய சிவம் வெளிப்பட்டு விளங்குமென்பது,

"உற்ற ஆக்கையின் உறுபொருள்; நறுமலரெழுதரு

நாற்றம்போல்

பற்றலாவதோர் நிலையிலாப் பரம் பொருள்?

எனவும்,

"பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும்

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன் றெனக் கெளிவந் தருளி அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்?

எனவும் வரும் திருவாதவூரர் அநுபவ மொழிகளால் இனிது புலனும். ஒவியம்-சித்திரம். ஒவியம் போல உணர்ந்தறித லாவது சித்திரம் போல அசைவற்று யோக நிலேயில் இருந்து சிவ பரம்பொருளைத் தியானித்துப் பிரிவற ஒன்றி யுணர்ந்து அறிதல், நாவி-புனுகுப்பூனே. நாவியணந்த நடுதறி என்பது புனுகுப்பூனே அணேந்த மூங்கிற்குழாய். பூனேயில்ை அணுகப்பெற்ற நடு தறியிலே புனுகு சேர்தல் போன்று சிவனது சேர்க்கையால் உயிரிடத்துச் சிவஞானம் பொருந்தித் தோன்றும் என்பதாம். புனுகு சிவஞானத் திற்கும் நடுதறி உயிர்க்கும் உவமை. இறைவன் உயிரி டத்தே எழுந்தருளி அருள் செய்தலால் உயிர் சிவஞானத் தைப் பெறும் என்பதாம்.