பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

177


மார்க்கம்-ஞானநெறி. நன்னெறி. இறைவனருளிய இந் நெறி குருவழியாக உபதேச முறையிற் பெறுதற்குரியது என்பார், உய்ய வகுத்த குருநெறி' என்ருர், சன்மார்க்க மாகிய சிவநெறி, வையத்து வாழ்வார் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படுதலாகிய சிவமாந் தன்மைப் பெருவாழ்வைப் பெற்று இன்புறுதற் பொருட்டு இறை வல்ை வகுத்தருளிச் செய்யப்பெற்றது என்பார் தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்து ய்ய வையத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே? என்ருர் . வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும் என்ருர் தெய்வப்புலவர் . அயன் திருமால் செல்வமு மொன்ருே வென்னச் செய்யுந்தேவே? என்ருர் அருணந்தி சிவாச்சாரியார் . பொறி வாயில் ஐத்தவித்தான் பொய் தீர் ஒழுக்கநெறி' என்பதும் நினேக்கத்தக்கது.

சன்மார்க்கம்

116. தெளிவறியாதார் சிவனேயறியாதார்

தெளிவறியாதார் சீவனுமாகார் தெளிவறியாதார் சிவமாகமாட்டார் தெளிவறியாதார் தீரார்பிறப்பே. (1480) ஞானநெறியாகிய சன்மார்க்க நெறிக்கண் நின்று தெளிவு பெருதார் ஒரு பயனும் எய்தார் என்பது உணர்த்துகின்றது.

(இ-ள்) சிவஞானமாகிய தெளிவினேப்பெற்று இறை வனே அறிந்து வழிபடாதார் அம்முதல்வனது இயல்பினே உள்ளவாறு அறியமாட்டார். அத்தெளிவின் துணைகொண்டு உயிராகிய தம்மைப் பிரித்தறிய மாட்டாதார் தம்மையுண ரும் அறிவினையுடைய உயிராக எண்ணப்பெறுவாரல்லர். சிவஞானமாகிய தெளிவினைப்பெற்று இறைவனேச் சிவோ கம் பாவனை செய்யுந் திறமில்லாதார் சிவமாந்தன்மைப் பெருவாழ்வாகிய வீடுபேற்றை அடையமாட்டார். சிவ