பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

179


என்பது பெறப்படும். உற்றிடும் உள்ளத்தோர் போகம் 5া ৫টা- இயைத்துரைத்தலுமாம். புருடார்த்தம்-மக்கள் எய்து தற்குரிய அறம் பொருள் இன்பம் வீடடைதலாகிய நாற் பொருட்பயன் . சித்தியது-முற்றுப் பெறுதலாகிய நிலேமை யது . அழியாத யோகிக்கே இரண்டும் ஆகும் என முடிக்க .

சற்புத்திரமார்க்கம்

118. பூசித்தல், வாசித்தல், போற்றல்,

செபித்திடல்,

ஆசற்ற நற்றவம், வாய்மை, அழுக்கின்மை,

நேசித் திட் டன்னமும் நீர் சுத்தி செய்தல்மற்

ருசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே. (1496) சற்புத்திர மார்க்கத்து இயல்புரைக்கின்றது.

(இ-ள்) இறைவனைப் பூசனை செய்தலும், அருள் நூல் களே வாசித்தலும், அவனைத் துதித்துப் போற்றுதலும், அவன் திருப்பெயரை மனத்தில் உருவெண்ணுதலும், குற்றமற்ற நல்ல தவமும், வாய்மையும், அழுக்காறின் மையும், அன்பு செய்து திருவமுது காட்டி நீராற் சுத்தி செய்தலும் ஆகிய இவைகளே குற்றமற்ற சற்புத்திர மார்க் கத்தின் செயல் முறைகளாம் எ-று.

நேசித்திட்டு-அன்பு செய்து அன்னமும் நீ சுத்தி செய்தல்? எனப் பாடங்கொண்டு ஹம்ச பாவனே செய்து ஆன்ம சுத்தி செய்தல்' எனப் பொருள் உரைத்தலும் உண்டு, அன்னம்-ஹம்சம் என்பதன் திரிபு. நீ என்றது ஆன்மாவை முன்னிலைப்படுத்தியது. நீர் சுத்தி செய்தல்நீராற் சுத்தி செய்தல். அன்னமும் என்ற உம்மையால் ஆன்ம சுத்தி முதலியனவும் கொள்ளப்படும்.