பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திருமந்திரம்

தாசமார்க்கம்

119. எளியனல் தீப மிடல்மலர் கொய்தல்

அளிதின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ்சன மாதி

தளிதொழில் செய்வதுதான் தாச

மார்க்கமே. (1502)

தொண்டு நெறியின் இயல்புணர்த்துகின்றது .

(இ - ள்) எளிமையுடைய பணிகளாகிய திருவிளக் கேற்றுதல் பூக்கொய்தல் திருக்கோயிலாகிய அதனேத் திரு வலகிடுதல் அன்புடைய சிந்தையுடன் திருமெழுக்கிடுதல் தோத்திரங்கள் சொல்லி வாழ்த்துதல் திருக்கோயிலில் (வழிபாட்டுக் காலங்களில்) மணிபற்றியடித்தல் திருமஞ் சனம் சேர்த்தல் முதலிய பலவாகிய தொண்டுகளேச் செய்வதுதான் தாசமார்க்கமாகும். எ-று .

எளியன தீபம் என்ருவது எளியநல் தீபம் என் ருவது பாடங்கொள்ளுதல் பொருத்தமாகும். அளிதின் - அன்புடைமையால் அளி - அன்பு. அது என்றது தளி யாகிய கோயிலேச் சுட்டியது. பளி - பள்ளி - கோயில்; இடைக்குறை. தளி தொழில் - கோயில் திருப்பணி. நிலே பெறுமாறெண்ணுதியேல்’ என வரும் திருத்தாண்டகமும் ‘தீபமாலே தூபமோடு சேர்ந்த கையராகி எனவரும் ஆளுடைய பிள்ளேயார் அருள் மொழியும், ஆமாறுன் திரு வடிக்கே யகங்குழையேன் அன்புருகேன், பூமாலே புனேந் தேத்தேன் புகழ்ந்துரையே ன் புத்தேளிர், கோமானின் திருக்கோயில் துகேன் மெழுகேன் கூத்தாடேன், சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே? எனவரும் திரு வாசகமும் இத்தொண்டு நெறியினேக் குறிப்பனவாகும்.