பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருமந்திரம்

யறிந்து அசத்தாகிய பாசங்களேச் சாராது சத்தாகிய சிவத்தினைச் சார்ந்து உய்திபெற வகுத்த நெறியே ໒໙໑ . ພໍ என்பார், சைவம் தனேயறிந்தே சிவம் சாருதல் என்ருர் . பாச நீக்கமும் சிவப்பேறும் ஆகிய இருவகைப் பயன்களுள் உயிர்க்குயிராய் உள் நின்று உதவிவரும் இறைவனருளால் அல்லது தான் ஒன்றையுஞ் செய்யாமையாகிய இறை பணியினுல் பாச நீக்கம் உளதாம் என்பர் சைவஞ் சிவமன்றிச் சாராமல் நீவுதல் என் ருர் . நீவுதல்-நீங்குதல். ஒரு பொருளேக் காட்டக் காணுந் தன் மையதாகிய கண்ணுக்கு ஒன்றைக் காணும்படி உடனிருந்து காட்டி அதனைத் தானும் காணும் உயிர்போல, அறிவிக்க அறியுந் தன்மையதாகிய உயிர் பொருள்களே அறியும்படி இறைவன் பிரிப்பின்றி உடனய் நின்று உயிர்க்கு அறிவித்துத் தானும் விடயங்களிற் கலந்து அறிந்து உதவி செய்தலால், இவ் வாறு உயிருடன் அத்துவிதமாய் நின்று உதவி செய்தருளும் இறைவனது பெருங்கருணையை மறவாது கடைப்பிடித்துச் செய்யும் பேரன்பினுல்ே அம் முதல்வனுடைய திருவடி யாகிய சிவாநந்த அனுபவத்தை ஆன்மா தலைப்பட்டு மகிழ்தலே சாயுச்சியமாகிய வீடுபேருகும் என்பார், சை வஞ் சிவானந்தஞ் சாயுச்சியமே என்ருர் . இத்திருமந்திரத் தின் முதலடியில் முப்பொருள்களின் உண்மையும் இலக்கண மும், இரண்டா மடியில் சாதனமும், மூன்ருமடியில் பாச நீக்க மும், நான்காமடியில் சிவப்பேறும் சுருக்கமாக விளக்கப் பெற்றுள்ளமை அறிந்து மகிழத் தகுவதாகும்.

சத்திகிபாதம்-சத்திபதிதல்

123. இருட்டறை மூலே யிருந்த குமரி

குருட்டுக் கிழவனேக் கூடல் குறித்துக் குருட்டினே நீக்கிக் குனம்பல காட்டி மருட்டி யவனே மணம் புரிந்தாளே. (1514)