பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருமந்திரம்

ஆன்மபோதத்தை மழுங்கச் செய்தல். மணம் புரிதல் - சிவபோகத்தை நுகர்தற்கு உரியவகையில் ஆன்மாவைச் சிவத்தோடு கூட்டுதல்.

இத்திருமந்திரத்தைத் தொடர்ந்த பாடல்கள் திரோத சத்தி யதிகாரத்தில் அமைந்தவென்பது முத்தி நிச்சயப் பேருரையில் வெள்ளியம்பலவாண முனிவரால் தெளிவாக விளக்கப்பெற்றது.

தீவிரதரம்

125. இருவினே நேரொப்பில் இன்னருட் சத்தி

குருவென வந்து குணம்.பல நீக்கித் தருமரன் ஞானத்தால் தன் செயலற்ருல் திரிமலந் தீர்ந்து சிவனவ னுமே. (1527) இருவினேயொப்பும் சத்தி நிபாதமும் எய்தினேர் பெறும் பயன் கூறுகின்றது .

(இ - ள்) புண்ணிய பாவமாகிய இருவினைகளிலும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடு வோனது அறிவின்கண் அவ்விருவினேப்பயன்களும் சமம் என்னும் உணர்வு தோன்றிய நிலையில் இனிய திருவரு ளாகிய சத்தி குருவாக எழுந்தருளிப் பசுபோத குணங்களை நீக்கித் தரும் சிவஞானத்தால் தன்செயலற்ருல் அவ் வான்மா மும்மலங்களும் கெட்டுச் சிவமேயாவன் என்ப தாம்.

இருவினே நேர் ஒத்தல்-இருவினேகளிலும் சமபுத்தியுண் டாதல்; இரு வினையொப்பாவது நல்வினை தீவினைகளிலும் அவற்றின் விளைவாகிய புண்ணியபாவங்களிலும் அவற்றின் பயணுகிய இன்பத்துன்பங்களிலும் ஒன்றில் விருப்பும் ஒன் றில் வெறுப்புமின்றி ஆன்ம அறிவின் கண் ஒப்ப உவர்ப்பு